விவசாய நிலங்களை ரியல் எஸ்டேட், பிற திட்டங்களுக்காக கையகப்படுத்துவதைத் தடுத்திடுக!
26 Sept 2026, 10:58 pm

விவசாய நிலங்களை ரியல் எஸ்டேட், பிற திட்டங்களுக்காக கையகப்படுத்துவதைத் தடுத்திடுக!

தூத்துக்குடி, செப். 26 –விவசாய நிலங்களை ரியல் எஸ்டேட், தொழில் மற்றும் பிற திட்டங்களுக்காகக் கையகப்படுத்துவதை முழுமையாகத் தடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் டி. ரவீந்திரன் வலியுறுத்தியுள்ளார்.வேளாண் நெருக்கடி, விளைபொருட்களுக்கு உரிய விலை, விவசாயக் கடன் தள்ளுபடி மற்றும் நீர்ப்பாசன மேம்பாடு உள்ளிட்ட பல்வேறுகோரிக்கைகளை முன்வைத்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 31ஆவது மாநில மாநாடு செப்டம்பர் 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தூத்துக்குடியில் நடைபெறவுள்ளது. மாநாட்டையொட்டி செய்தியாளர்களைச் சந்தித்து மாநிலத் தலைவர் டி. ரவீந்திரன் பேசினார்.

ஒன்றிய பாஜக அரசின் கார்ப்ப

ரேட் ஆதரவு வேளாண் கொள்கைகள் விவசாயிகளைப் பாதித்து வருவதாகவும், தமிழகத்தில் ஆளும் அரசும் அத்தகைய கொள்கைகளையே கடைப்பிடிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 25 ஆண்டுகளில் சாகுபடி பரப்பளவு சுமார் 45 ஆயிரம் ஏக்கர் வரை குறைந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே, விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட் மற்றும் இதர திட்டங்களுக்காக மாற்றப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், விவசாயத்திற்குப் போதுமான கிடைக்கும் சூழலை உருவாக்கினால்தான் விளைநிலங்களைப் பாதுகாக்க முடியும் எனவும் அவர் வலியுறுத்தினார். மேலும், தொழில் வளர்ச்சிக்காக நன்செய் நிலங்களைக்

கையகப்படுத்தும் சட்டத் திருத்தத்தைக் கண்டித்த அவர், தமிழகத்தில் சிறு, குறு விவசாயிகள் கூட்டுறவுவங்கிகளில் பெற்றுள்ள பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இன்று பேரணிமாநாட்டின் முதல் நாளானசெப்டம்பர் 27ஆம் தேதி தூத்துக்குடியில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்கும் உழவர் பேரணியும் பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது.