முந்தய பக்கம்

பங்குச் சந்தை புள்ளிகள் உயர்வு

9 Apr 2026, 5:30 am
பங்குச் சந்தை புள்ளிகள் உயர்வு

பங்குச் சந்தை புள்ளிகள் உயர்வு

மும்பை: போர் நிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து சர்வதேச அளவில் பங்குச்சந்தைகள் உயர்வுடன் காணப்பட்டன. அதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளும் காலை முதலே உயர்வுடன் காணப்பட்டு முடிவடைந்தன.

மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 2,983 புள்ளிகள், அதாவது கிட்டத்தட்ட 4% உயர்ந்து, 77,599.66 புள்ளிகளில் நிறைவடைந்தது. அதே நேரத்தில், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 50 குறியீடு 920 புள்ளிகள் அதிகரித்து 24,012.95 புள்ளிகளை எட்டியது. இந்த முன்னேற்றத்தால் முதலீட்டாளர்கள் ரூ.15 லட்சம் கோடியை அள்ளினர்.

ஆனால் தங்கம் விலை மட்டும் தாறுமாறாக உயர்ந்தன. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,720 உயர்ந்து, ரூ.1,13,600க்கு விற்பனையாகியது.

Share
FacebookXWhatsAppTelegram