முந்தய பக்கம்

வந்தவாசியில் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்

10 Apr 2026, 5:30 am
வந்தவாசியில் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்

வந்தவாசியில் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்

திருவண்ணாமலை, ஏப். 9- திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ். அம்பேத்குமார், இன்று வந்தவாசி நகரின் பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வந்தவாசி நகரம், ஆரணி சாலை, காஞ்சிபுரம் சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டிய அவருக்கு, வழிநெடுகிலும் பொதுமக்கள் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்தப் பிரச்சாரத்தின் போது பேசிய அம்பேத்குமார், "வந்தவாசி மக்களின் நீண்ட கால கோரிக்கையான புதிய தொழிற்பேட்டை அமைப்பதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என உறுதி அளித்தார். தொகுதி வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை மையமாக வைத்து இந்தப் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram