முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

17 Dec 2025, 4:11 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

சட்டமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கக் குழு அமைப்பு

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல், அடுத்த  ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலை யில், தேர்தலுக்கான அறிக்கையைத் தயா ரிக்க குழு அமைத்து திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  திமுக பொதுச்செய லாளர் க. கனிமொழி எம்.பி. தலைமையிலான இந்த குழுவில், குழுவில் டிகேஎஸ் இளங்கோவன், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், டிஆர்பி  ராஜா, எம்.எம். அப் துல்லா, கான்ஸ்டைன் ரவீந்திரன், கார்த்திகேய சிவசேனாபதி, தமிழரசி ரவிக்குமார், ஜி சந்தானம், சுரேஷ் சம்பந்தம்” ஆகியோர் இடம் பெற் றுள்ளனர். கடந்த சட்ட மன்றத் தேர்தலின் போது,  மகளிருக்கு பேருந்து களில் இலவசப் பயணம்,  குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங் கப்படும் என்பன உள் ளிட்ட வாக்குறுதிகளை திமுக தனது தேர்தல் அறிக்கையில் அளித்திருந் தது குறிப்பிடத்தக்கது.

10,12 ஆம் வகுப்பு தேர்ச்சியை அதிகரிக்க நடவடிக்கை!

சென்னை: எஸ்.எஸ்.எல்.சி. பிளஸ் 2 ஆகிய இரண்டு பொதுத்தேர்வு தேர்ச்சி சதவிகிதத்தை கண்டிப்பாக அதிகரித்து காட்ட வேண்டும் என்ற  முனைப்பில் பள்ளிக் கல்வித் துறை களம் இறங்கியுள்ளது. கடந்த ஆண்டு பொதுத் தேர்வில் பல மாவட்டங் கள் தேர்ச்சி சதவிகித  பட்டியலில் பின்தங்கியிருந் தன. குறிப்பாக, தலைநக ரான சென்னை தேர்ச்சி சத விகிதத்தில் மிகவும் பின் தங்கி இருந்தது. எனவே, பின்தங்கிய மாணவ - மாணவியரை அடையாளம் கண்டு அவர்களுக்காக சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு தேர்ச்சி பெறும் அளவுக்கு அவர்களை தயார்படுத்தி வருகின்றனர். காலாண்டு  தேர்வு முடிவு அடிப்படை யில் இவ்வகையான மாணவ - மாணவியர் அடையாளம் காணப் பட்டு இருக்கின்றனர். அவர்கள் மீது, அந்தந் தப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரி யர்கள் தனிக்கவனம் செலுத்துகின்றனர். பள்ளிக் கல்வித்துறை யின் இந்த நடவடிக்கை அடுத்த ஆண்டு மே மாதத்தில் வெளியாகும் பொதுத்தேர்வு முடிவில் பிரதிபலிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Share
FacebookXWhatsAppTelegram