தென்னை விவசாயத்தை மேம்படுத்த நடவடிக்கை உடுமலை திமுக வேட்பாளர் ஜெயக்குமார் வாக்குறுதி
10 Apr 2026, 5:30 am

தென்னை விவசாயத்தை மேம்படுத்த நடவடிக்கை

உடுமலை, ஏப். 9- உடுமலைப்பேட்டை சட்டமன்றத் தொகுதியின் முக்கிய அடையாளமாக விளங்கும் தென்னை விவசாயத்தைப் பாதுகாக்கவும், தென்னை விளைபொருள்களிலிருந்து மதிப்புக்கூட்டு பொருள்களை உற்பத்தி செய்யும் வகையில் சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்படும் என திமுக வேட்பாளர் ஜெயக்குமார் உறுதி அளித்துள்ளார்.

பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட உடுமலைப்பேட்டை சட்டமன்றத் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சியினருடன் வேட்பாளர் ஜெயக்குமார் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். பி.ஏ.பி. காலனி பகுதியில் தொடங்கிய இந்தப் பிரச்சாரம், சங்கம்பாளையம், கோலங்கமம் உள்ளிட்ட பகுதிகளில் எழுச்சியுடன் நடைபெற்றது.

பிரச்சாரத்தின் போது வேட்பாளர் ஜெயக்குமார் பேசுகையில், "உடுமலைப்பேட்டை சட்டமன்றத் தொகுதியின் மேற்குப் பகுதியில் தென்னை விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இதனைச் சார்ந்து தேங்காய் நார் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. தென்னை விளைபொருள்களிலிருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களைத் தயாரிப்பதற்கான சிறப்பு மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.