தீக்கதிர் முக்கிய செய்திகள
15 Feb 2026, 3:03 pm

புள்ளியியல் சார்நிலை அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டம்

நாகப்பட்டினம்: தமிழ்நாடு புள்ளியியல் சார்நிலை அலு வலர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம், நாகப்பட்டினம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கக் கட்டிடத்தில் மாநிலத் தலை வர் பால்ஜெயக்குமார் தலைமையில் சனிக்கிழமை நடை பெற்றது. மாநிலச் செயலாளர் சிவக்குமார் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாவட்டத் தலைவர் விஜயகுமார் வரவேற்புரை ஆற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் த.ஸ்ரீதர் துவக்கவுரையாற்றினார். பொதுச் செய லாளர் ரமேஷ் வேலை அறிக்கையையும், மாநிலப் பொரு ளாளர் அண்ணாமலை நிதிநிலை அறிக்கையையும் முன் வைத்தனர். மாநிலத் தலைவர் புள்ளியியல் உதவி இயக்குநராக பதவி உயர்வு பெற்றுள்ளதால் இடைக்கால மாநிலத் தலைவ ராக, மாநில துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் தேர்ந்தெ டுக்கப்பட்டார். மேனாள் தலைவர் ப.அந்துவன்சேரல் நிறை வுரையாற்றினார். மாவட்டப் பொருளாளர் பிரியா லெட்சுமி நன்றியுரையாற்றினார். தனி அமைப்புக்கென பறிக்கப்பட்ட புள்ளியியல் ஆய்வா ளர் பணியிடங்களைப் பெற துறை நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். திட்டப் பணிகள், கணக்கெடுப்புப் பணி கள் என நெருக்கடிகளுக்கிடையில் களப் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு தேவையான கால அவகாசம் அளித்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

தமிழ்நாட்டின் பாறை ஓவியங்கள் நூல் வெளியீடு

சென்னை: தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் பேராசிரியர் கா.ராஜன் மற்றும் முனைவர் இரா.சிவானந்தம் ஆகியோர் எழுதிய “தமிழ்நாட்டின் பாறை ஓவியங்கள் - Rock Art of TamilNadu” என்ற நூலினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தமிழ்நாட்டில் அமைந்துள்ள 46 பாறை ஓவியத் தளங்களில் மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆவணப்படுத்த லின் விளைவாக இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு, தொல்லியலாளர்கள், நாட்டுப்புறவியலாளர்கள், மானுடவியலாளர்கள், நிலவியலாளர்கள், கலை வரலாற் றாசிரியர்கள் மற்றும் தொல்பழங்கால சூழலியலாளர்கள் ஆகிய பல்துறை ஆய்வாளர்கள் கொண்ட குழுவினால் மேற் கொள்ளப்பட்டது. குழுவினர்கள் சேகரித்த தகவல்களும், விளக்கங்களும் ஒருங்கிணைந்த அறிவுசார் படைப்பாக இந்நூலில் முன்வைக்கப்பட்டுள்ளன. பாறை ஓவியங்களின் பண்பாட்டுச் சிறப்பை மதிப்பாய்வு செய்வதற்கு உதவும் வகையில், இந்நூலில் நிழற்படங்கள், வரைபடங்கள் வழங்கப்பட்டுள்ளன. இது, கடந்தகால மக்களின் சமூக வாழ்க்கையை பிரதிபலிப்பதோடு, அவர்களின் உள்ளுணர்வு, சிந்தனைத் திறன் ஆகியவற்றை வெளிப் படுத்துகின்றன. பாறை மேற்பரப்புகளில் வரையப்பட்ட இக்காட்சிகள், கலை மீது கொண்டிருந்த அவர்களின் மதிப்பையும், சமூக ஒற்றுமையையும் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. இந்நூல் மொத்தம் 734 பக்கங்களைக் கொண்டதாகும். இதில் 92 நிலப்படங்கள், 682 வண்ண நிழற்படங்கள் மற்றும் 528 கோட்டுருவ வரைபடங்கள் இடம்பெற்றுள்ளன.

முதலமைச்சர் இரங்கல்

சென்னை: முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப் பனின் மூத்த மகனும் தயாரிப்பாளருமான தமிழ் அழகன் மறைவுக்கு முத லமைச்சர் மு.க.ஸ்டா லின் இரங்கல் தெரிவித்து உள்ளார். திரைத் துறையில் தயாரிப்பாள ராக முத்திரை பதித்த தமிழ் அழகன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கி. வீரமணி கண்டனம் சென்னை: அரசு நிகழ்ச்சிகளில்

‘வந்தே மாதரம்’ பாடலைக் கட்டாய மாக்கி ஒன்றிய அரசு அனுப்பியுள்ள சுற்ற றிக்கை, அரசியல மைப்புச் சட்டம் வழங்கி யுள்ள மதச் சுதந்திரத்திற்கு எதிரானது என்று திரா விடர் கழகத் தலைவர் கி. வீரமணி கண்டனம் தெரி வித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை யில், “இந்தியா ஒரு மதச் சார்பற்ற நாடு. பங்கிம் சந்திர சட்டர்ஜியின் ‘ஆனந்த மடம்’ நாவலில் இடம்பெற்ற இப்பாடல், இஸ்லாமியர்களுக்கு எதி ரான கருத்துகளைக் கொண் டிருப்பதால் அன்றே சுபாஷ் சந்திரபோஸ், ரவீந்திரநாத் தாகூர் போன் றோரால் நிராகரிக்கப் பட்டது. குறிப்பிட்ட மத நம்பிக்கைகளை முன்னி லைப்படுத்தும் பாடலைப் பாட வற்புறுத்துவது அடிப் படை உரிமையைப் பறிப்பதாகும். 1985-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய ‘பிஜோ இமானுவேல்’ வழக்கின் தீர்ப்பின்படி, மத நம்பிக்கைக்கு எதிரான பாடலைப் பாட வற்புறுத்து வது சட்டவிரோதமானது. நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு மாறாக, ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க கூட்டணி தனது இந்துத்துவக் கொள் கையைத் திணிக்க முயல் வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்த ஜனநாயக விரோதத் திணிப்பிற்கு எதிராக நாடு தழுவிய அளவில் கண்ட னங்கள் எழ வேண்டும்” என அவர் வலியுறுத்தி யுள்ளார்.

ரம்ஜான்: 8,700 மெ.டன் அரிசி ஒதுக்கீடு

சென்னை: ரம்ஜான் பண்டிகையை ஒட்டி பள்ளி வாசல்களில் நோன்பு கஞ்சிக்காக 8,700 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இதற் காக ரூ.20.88 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.