ஜாக்டோ – ஜியோ அமைப்பு சார்பில் மாநிலம் தழுவிய உண்ணாநிலை
13 Dec 2025, 5:13 pm
<p><strong>ஜாக்டோ – ஜியோ அமைப்பு சார்பில் மாநிலம் தழுவிய உண்ணாநிலை</strong></p>
<p>தருமபுரி, டிச.13- பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி ஜாக்டோ – ஜியோ அமைப்பு சார் பில் சனியன்று மாநிலம் தழுவிய உண் ணாநிலை இயக்கம் நடைபெற்றது. தேர்தல் வாக்குறுதிப்படி, பழைய ஓய் வூதிய திட்டத்தை நிறைவேற்ற வேண் டும். ஆசிரியர் தகுதித்தேர்விலிருந்து விலக்களித்து ஆசிரியர்களை பாதுகாத் திட தமிழ்நாடு அரசு சீராய்வு மனு உள் ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண் டும். ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப் பட்டு வரும் அநீதி களையப்பட வேண் டும். சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம் பெறும் சத்துணவு, அங் கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர் கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோ ருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ – ஜியோ அமைப்பு சார்பில் சனியன்று மாநி லம் தழுவிய உண்ணாநிலை இயக்கம் நடைபெற்றது. அதன்படி, தருமபுரி ஆட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற போராட் டத்திற்கு, அமைப்பின் மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் எம்.சுருளிநாதன் தலைமை வகித்தார். இதில் ஆசிரியர் கழக மாநில அமைப்பு செயலாளர் ராசா.ஆனந்தன், ஜாக்டோ – ஜியோ நிதி காப்பாளர் கே.புக ழேந்தி, அரசு பணியாளர் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் கே.பாஸ்க ரன், தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட் டணி மாநில பொதுச்செயலாளர் கோ. காமராஜ், அரசு ஊழியர் சங்க மாவட் டச் செயலாளர் ஏ.தெய்வானை, பொரு ளாளர் எம்.அன்பழகன், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாநில துணைத் தலைவர் எஸ்.இளங்குமரன் மற்றும் பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அரசு ஊழியர் சங்க மாநில துணை பொதுச்செயலா ளர் அண்ணா குபேரன் நிறைவுரையாற் றினார். சேலம் சேலம் கோட்டை மைதானத்தில், ஜாக்டோ – ஜியோ அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வெ.அர்த்த னாரி, பி.கோவிந்தன், சி.திருமுருக வேல், பி.சுரேஷ், த.சங்கர் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில ஒருங்கி ணைப்பாளர் இலா.தியோடர் ராபின்சன் சிறப்புரையாற்றினார். அப்போது, தமி ழக அரசு ஜாக்டோ - ஜியோ அமைப்பின் கோரிக்கையை உடனடியாக நிறை வேற்ற வேண்டும். மறுக்கும் பட்சத்தில் ஜன.6 ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தம் நடைபெறும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கோவை கோவை, சிவானந்தா காலனியில் நடைபெற்ற போராட்டத்திற்கு, அமைப் பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சி.அரசு, சாலமன்ராஜ், ப.செந்தில்கு மார், எம்.ராஜசேகரன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில ஒருங்கி ணைப்பாளர் ச.மயில் சிறப்புரையாற்றி னார். ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைத்தலைவர் அ.தங்கம் பாசு, ஓய்வூதியர் சங்க மாநில துணைத் தலைவர் என்.அரங்கநாதன், மருந்தா ளுநர் சங்க மாநிலச் செயலாளர் வள்ளு வன், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணைத் தலைவர் த.அருளானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஈரோடு ஈரோடு காளை மாட்டுச்சிலை அருகே நடைபெற்ற உண்ணாநிலை இயக்கத்திற்கு, அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ச.விஜயமனோ கரன், பி.சரவணன், பி.எஸ்.வீரா கார்த் திக், அ.ஆறுமுகம் ஆகியோர் தலைமை வகித்தனர். பல்கலைக்கழக ஆசிரியர் சங்க நிர்வாகி ஜெ.காந்திராஜன் சிறப் புரையாற்றினார். மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் தங்கவேல், நிர்வாகிகள் கு. ரமாமணி, பெ.சுபாசினி, ஜி.நாகராஜன், ரவிக்குமார், க.சு.பிரகாசம் உட்பட திர ளானோர் கலந்து கொண்டனர். நீலகிரி நீலகிரி மாவட்டம், உதகை மத்திய பேருந்து நிலையம் அருகே ஜாக்டோ – ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கள் ஆர்.அண்ணாதுரை, எஸ்.சிவபெரு மாள் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் ஒருங்கிணைப்பாளர்கள் பி. ஜெயசீலன், எஸ்.முருகேசன், எம்.பி. குமார் உட்பட பலர் கலந்து கொண் டனர். நாமக்கல் நாமக்கல் பூங்கா சாலையில் நடை பெற்ற போராட்டத்திற்கு, அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் முருக செல்வ ராசன், பழனியப்பன், ராமு ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், அரசு மற் றும் ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.</p>
