தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி டிச. 8இல் மாநிலம் முழுவதும் போராட்டம் சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் அ.சவுந்தரராசன் பேச்சு

20 Nov 2025, 3:46 pm
தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம்  செய்யக் கோரி டிச. 8இல் மாநிலம் முழுவதும் போராட்டம் சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் அ.சவுந்தரராசன் பேச்சு
<p><strong>தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் &nbsp;செய்யக் கோரி டிச. 8இல் மாநிலம் முழுவதும் போராட்டம் சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் அ.சவுந்தரராசன் பேச்சு</strong></p> <p>சென்னை, நவ. 20- தூய்மைப் பணியாளர் களை பணி நிரந்தரம் செய்யக் கோரி டிச. 8இல் மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற உள்ளதாக சிஐடியு &nbsp;அகில இந்திய துணைத்தலைவர் அ.சவுந்தரராசன் தெரி வித்தார். சென்னை மாநகராட்சி யில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி எல்டியுசி தொழிற்சங்கம் சார்பில் அம்பத்தூரில் உள்ள அவர்களது அலுவ லகத்தில் தொழிலாளர்கள் தொடர் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள னர். சவுந்தரராசன் நேரில் சந்தித்து வாழ்த்தி, ஆதரவு தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது, தூய்மைப் பணியாளர்கள் காலவரை யற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள னர். அவர்களுடைய போராட்டத்தைத் தொடர்ந்து அடக்கவும், ஒடுக்கவும் அரசு நடவடிக்கை எடுத்ததை ஒட்டி நீதிமன்றத்திற்குச் சென்று, அவர்கள் நியாயம் கேட்டபோது, நீதிமன்ற உத்தரவுப்படி, இப்போது நான்கு பேர், நான்கு பேராக காலவரையற்ற உண்ணா நிலை இருக்கலாம், 50 பேருக்கு மேல் அங்கே கூடக் கூடாது என்ற நிபந்த னையுடன் நீதிமன்றம் அவர்களுக்கு அனுமதி அளித்திருக்கிறது. சிஐடியு உள்ளிட்ட எந்த தொழிற்சங்கத்திற்கும் இந்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கவில்லை. இந்தத் தீர்ப்பை நியாயமான தீர்ப்பாகவும் கருதவில்லை. போக்குவரத்திற்கு இடை யூறு இல்லாமல், பொது இடத்தில் போராட்டம் நடத்த அனுமதிப்பதற்கு என்ன தடை, என்ன பிரச்சனை என்று கேள்வி எழுப்பினார். உள்ளாட்சி அமைப்பு கள், மாநகராட்சி, நக ராட்சி, பேரூராட்சி, ஊராட்சி போன்ற அனைத்து உள் ளாட்சி அமைப்புகளிலும் பணிபுரியும் பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உட்பட அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அதுவரை சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். அவுட்சோர்சிங், கான்ட்ராக்ட் முறைகளைக் கைவிட வேண்டும். &nbsp;நீதிமன்றங்கள் ஏற்கெனவே வழங்கியுள்ள தீர்ப்பின் அடிப்படையில் குறைந்த பட்ச ஊதியம் அவர்களுக்கு வழங்க வேண்டும். தொழி லாளர்களிடம் பிடித்தம் செய்த வருங்கால வைப்பு நிதி முறையாக செலுத்தப் படாமல் உள்ளது. அது முறையாக செலுத்தப்பட வேண்டும். போனஸ் உள்ளிட்ட சட்டப்படியான உரிமைகள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அவர்கள் பயன்படுத்தும் கருவிகளை தரமானதாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி டிசம்பர் 8ஆம் தேதி தமிழகம் தழுவிய வேலை நிறுத்தம் அனைத்து உள்ளாட்சி அமைப்பு களிலும் நடைபெற உள்ளது என்றும், ஒப்பந்த முறையை, தற்காலிக பணி முறையை எதிர்த்து, பணி நிரந்தரம் கோரி நடை பெறும் அந்தப் போராட்டம் வலுவான போராட்டமாக மேலும் விரிவுபடுத்தப் &nbsp;படும் என்றும் அவர் தெரி வித்தார். எனவே முதலமைச்சர் இந்தப் பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு, சட்டப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று உள்ளாட்சி களுக்கு நீங்கள் உத்தரவிட வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை அமல் படுத்துவதற்கான நடவ டிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.