தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாநிலம் முழுவதும் ஜாக்டோ – ஜியோ அடையாள வேலை நிறுத்தம்

18 Nov 2025, 3:21 pm
மாநிலம் முழுவதும் ஜாக்டோ – ஜியோ அடையாள வேலை நிறுத்தம்
<p><strong>மாநிலம் முழுவதும் ஜாக்டோ &ndash; ஜியோ அடையாள வேலை நிறுத்தம்</strong></p> <p>உதகை, நவ.18- பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு முழுவதும் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் செவ்வாயன்று அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து &nbsp;விட்டு, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை &nbsp;செயல்படுத்த வேண்டும். ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் செவ்வாயன்று அடையாள வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்ஒருபகுதியாக, நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஜாக்டோ &ndash; ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் அண்ணாதுரை, ஜெய சீலன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், நிர்வாகிகள் சிவ பெருமாள், ராஜேந்திரன் உள் ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கோவை &nbsp;கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அரசு தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ச.ஜெக நாதன், செயலாளர் ப.செந்தில்குமார், ஆசிரியர் &nbsp;கூட்டணி மாவட்டச் செயலாளர் ராஜசேகரன் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழி யர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதே போன்று பொள்ளாச்சி, மேட்டுப்பாளைம் உள் ளிட்ட 6 வட்டங்களில் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. ஈரோடு ஈரோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங் கிணைப்பாளர்கள் ச.விஜயமனோகரன் மற்றும் பி.சரவணன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதேபோல தாளவாடி, சத்தி, கோபி, நம்பியூர், பெருந்துறை, மொடக்குறிச்சி, கொடுமுடி, பவானி மற்றும் அந்தியூர் ஆகிய வட்டாட்சியர் அலுவல கங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கள் கோவிந்தன், சுரேஷ் ஆகியோர் தலைமை வகித்தனர். ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் சிறப்புரையாற் றினார். இதில், ஏராளமான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். நாமக்கல் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தைச் சார்ந்த மாவட்டத் &nbsp;தலைவர் வீராசாமி, செயலாளர் த.சிவக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்ட னர். தருமபுரி தருமபுரி மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட் டத்தில் ஈடுபட்டதால், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. சில அலுவலகங் கள் பூட்டப்பட்டிருந்தன.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.