முந்தய பக்கம்

அரசு விழாக்களில் மாநிலப் பாடலுக்கே முதலிடம்! உள்துறை அமைச்சகம் வழிகாட்டுதல்

11 Jul 2026, 9:39 pm
அரசு விழாக்களில் மாநிலப் பாடலுக்கே முதலிடம்!  உள்துறை அமைச்சகம் வழிகாட்டுதல்
<p><strong>அரசு விழாக்களில் மாநிலப் பாடலுக்கே முதலிடம்! உள்துறை அமைச்சகம் வழிகாட்டுதல்</strong></p><p>சென்னை, ஜூலை 11 - அரசு விழாக்களில் மாநிலப் பாடலே முதலில் பாடப்பட வேண்டும் என உத்தரவிட்டு ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. இதன்படி, முதலில் மாநிலப் பாடல், அதைத் தொடர்ந்து தேசியப் பாடல் (வந்தே மாதரம்), இறுதியாக தேசிய கீதம் (ஜன கண மன) என்ற வரிசையில் பாடப்பட வேண்டும். தேசியப் பாடல் மற்றும் தேசிய கீதத்தைப் பாடும்போது அவற்றின் அசல் வரிகள் மற்றும் சரியான உச்சரிப்பு முறைகளைத் துல்லியமாகப் பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேச நிர்வாகங்கள் மற்றும் ஒன்றிய அமைச்சகங்களுக்குப் புதிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ள ஒன்றிய உள்துறை அமைச்சகம், இந்த வரிசைமுறையைத் தவறாமல் பின்பற்றுமாறு மாநிலங்களையும் யூனியன் பிரதேசங்களையும் அறிவுறுத்தியுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram