திருவாரூரில் சிபிஎம் நிதி வசூலில் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பங்கேற்பு
6 Jan 2026, 4:23 pm
<p><strong>திருவாரூரில் சிபிஎம் நிதி வசூலில் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பங்கேற்பு</strong></p>
<p>திருவாரூர், ஜன.6- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடந்த ஜன.1 ஆம் தேதி முதல், கட்சி நிதியாக வீடு வீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்து நிதி வசூல் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவாரூர் கடைவீதியில் திங்கள் கிழமை மாலை நிதி வசூல் நடைபெற்றது. சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி. முருகையன் தலைமையில் நடைபெற்ற இந்த நிதி வசூலில் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் பங்கேற்று, கட்சி நிதி பெறும் இயக்கத்தில் கலந்து கொண்டார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி. சுந்தரமூர்த்தி, பா. கோமதி, கே.பி. ஜோதிபாசு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஜி. பழனிவேல், எம். கலைமணி மற்றும் ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ். சுந்தரய்யா, நகரச் செயலாளர் எம்.டி. கேசவராஜ் மற்றும் ஒன்றிய, நகர உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.</p>
