கோவையில் தயாராகும் அதிநவீன பிரச்சார வாகனங்கள்!
19 Mar 2026, 3:18 pm
<p><strong>கோவையில் தயாராகும் அதிநவீன பிரச்சார வாகனங்கள்!</strong></p>
<p>கோவை, மார்ச் 19- தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் களம் மட்டுமன்றி கோவையின் வாகன கட்டமைப்புத் தொழிலும் தற்போது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழ கத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலை வர்களுக்காக கோவையில் உள்ள தனி யார் நிறுவனங்கள் அதிநவீன வசதிகளு டன் கூடிய பிரச்சார வாகனங்களை வடி வமைத்து வருகின்றன. குறிப்பாக, சொகுசு கார்களுக்கு இணையான உட் புற அலங்காரங்களுடன் இந்த வாகனங் கள் உருவாக்கப்படுவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த நவீன வாகனங்களில் தலை வர்கள் நின்றபடி பேசுவதற்கு ஏதுவாக தானியங்கி முறையில் உயரும் ஹைட் ராலிக் லிப்ட் வசதிகள், குளிர்சாதன வசதி மற்றும் நீண்ட நேரப் பயணத் திற்கு ஏற்ற சுழலும் சொகுசு இருக்கை கள், சிசிடிவி கேமராக்கள், மானிட்டர் கள், கழிவறைகளோடு அமைக்கப் பட்டுள்ளன. மேலும், வாகனத்தின் கூரைப் பகுதியில் ’ஸ்டார் லைட்ஸ்’ எனப்படும் நட்சத்திர மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பம்சமாகும். உயர்தர ஒலிபெருக்கிகளும், சில வாகனங்களில் திரைகளும் பொருத்தப் பட்டுள்ளன. தேர்தல் பணிகளுக்காக மாநிலம் முழுவதுமிருந்து கோவையை நோக்கி ஆர்டர்கள் குவிந்து வரும் சூழலில் பெரும்பாலான வாகனங்கள் தயாராகி கட்சி அலுவலகங்களுக்கு சென்றுள்ளது. மீதமுள்ள வாகனங்கள் பாடி பில்டிங் நிறுவனங்கள் தற்போது இரவு பகலாக மும்முரமாக செயல் பட்டு வருகின்றன. தமிழ்நாடு முதல்வர், முன்னாள் முதல்வர், அமைச்சர்களது வாகனங்கள் சில கூடுதல் வசதிகள் செய்யப்பட்டு அனுப்பிவைக்கப்படுகி றது. கடந்த தேர்தல்களை விட இம் முறை கூடுதலாக சிறியரக பிரச்சார வாகனங்கள் தயாராகியுள்ளது. தமிழ் நாடு மட்டுமின்றி, கேரளம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு கோவை யில் இருந்து பிரச்சார வாகனங்கள் தயா ராகி செல்வது குறிப்பிடத்தக்கது.</p>
