தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் உலக செய்திகள்

31 Jan 2026, 3:56 pm
தீக்கதிர்  உலக செய்திகள்

கியூபா விவகாரத்தில்  அவசர நிலை அறிவிப்பு

கியூபாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்யும் நாடுகளின் மீது புதிய வரி விதிக்கும் நிர்வாக உத்த ரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இந்த உத்தரவுக்குப் பதிலடியாக, கியூபா “சர்வதேச அவசரநிலை யை” பிரகடனப்படுத்தியுள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் புருனோ ரோட்ரிக்ஸ் பரிலா  தெரிவித்துள்ளார்.  இந்த அச்சுறுத்தல் அனைத்து நாடுகளின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள் கைகள், சர்வதேச அமைதி, பாதுகாப்பு, அணுசக்தி அச்சுறுத்தல்கள் மற்றும் காலநிலை மாற்றத்திற்கு மத்தியிலான மனிதகுலத்தின் உயிர்வாழ்விற்கும் ஆபத்தை விளைவிக்கும் எனவும் தெரிவித்தார்.

சீனாவின் வளர்ச்சி அச்சுறுத்தலாக இருக்காது

சீனா- பிரிட்டன் ஆகிய இரு நாடுகளும் நீண்டகால, நிலையான மற்றும் விரிவான திட்டமிட்ட உறவை மேம் படுத்த ஒப்புக்கொண்டுள்ளன. உலக அமைதியை நிலைநாட்டவும், இரு நாட்டு மக்களின் வாழ்வாதா ரத்தை மேம்படுத்தவும் இந்த ஒத்துழைப்பு உதவும். சீனா எப்போதும் அமைதியான வளர்ச்சியை மட்டுமே விரும்புகிறது. சீனா இதுவரை எந்தப் போரையும் தொடங்கியதில்லை. சீனா எவ்வளவு வளர்ச்சியடைந்தாலும், அது மற்ற நாடுகளுக்கு ஒருபோதும் அச்சுறுத்தலாக இருக்காது என சீன ஜனாதிபதி ஜி ஜின் பிங் தெரிவித்துள்ளார்.

சூடானில் போரை நிறுத்துங்கள் : குட்டரெஸ் வலியுறுத்தல்

தெற்கு சூடானில் நடைபெற்று வருகிற உள்நாட்டுப்போரை உடனடியாக நிறுத்திவிட்டுப் பேச்சுவார்த்தை யைத் தொடங்க வேண்டும் என்று ஐ.நா அவை பொதுச்செயலாளர் அந்தோணியோ குட்டரெஸ் வலி யுறுத்தியுள்ளார். இந்த போரில் ஆயிரக்கணக்கான மக்கள்  உயிரிழந்துள்ளனர். தெற்கு சூடானின் ஜொங்லே மாகாணத்தில் மட்டுமே சுமார் 1,80,000 பொதுமக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேற்றப் பட்டுள்ளனர். சூடானில் நிலவும் நெருக்கடிக்கு ராணுவ ரீதியான தீர்வு கிடையாது, அரசியல் ரீதியான தீர்வு மட்டுமே சாத்தியம் என்றும் அவர்  சுட்டிக்காட்டியுள்ளார்.

காசாவில் குண்டு வீச்சு : 12 பேர் படுகொலை

காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 12 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். வடக்கு மற்றும் தெற்கு காசாவிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு, கூடாரம் என பாலஸ்தீன பொது மக்கள் இருக்கும் இடங்களை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை குண்டு வீசியுள்ளது. இதில் இருவேறு குடும்பங் களைச் சேர்ந்த இரண்டு பெண்கள் மற்றும் ஆறு குழந்தைகள்  படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 2025 அக்டோபர் 10 அன்று போர்நிறுத்தம் அமலுக்கு வந்ததிலிருந்து இஸ்ரேல் ராணுவம் 500-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களை படுகொலை செய்துள்ளது.

டிரம்ப், நேதன்யாகுதான் பதற்றத்தை தூண்டுகின்றனர் : ஈரான்

டிரம்ப், நேதன்யாகு மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து தான் ஈரான் மக்கள் போராட்டத்தில் பதற்றத்தைத் தூண்டி விட்டுள்ளனர் என ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் குற்றம் சாட்டி யுள்ளார். அமெரிக்கத் தடைகளால் உருவான பொருளாதார நெருக்கடி உச்ச கட்டத்தை அடைந்துள்ள நிலை யில், ஈரானில் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. அரசின் அடக்குமுறையில் உள்ளது. இந்நிலையில் ஈரான் வெளியுறவுத் துறை  அமைச்சர் அப்பாஸ் அராக்சி 2,000 பாதுகாப்புப் படை வீரர்கள்  உட்பட 3,100 பேர் இந்த போராட்டத்தில் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

டாண்டலம் சுரங்கத்தில் நிலச்சரிவு காங்கோவில் 200 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பலி

கின்ஷாசா,ஜன.31- காங்கோ ஜனநாயகக் குடியரசில் உள்ள ருபாயா (Rubaya) டாண்டலம் (tantalum) சுரங்கத்தில் ஏற்பட்ட சரிவில் சிக்கி 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.  ருவாண்டாவில் உள்நாட்டுப்போரில் ஈடுபட்டுள்ள எம்23 என்ற ஆயுதக்குழுவின் ஆதரவுடன் காங்கோவில்  ஏஎப்சி/எம்23 ஆயுதக்குழுக்கள் பல இடங்களை கைப்பற்றியுள்ளன. இவை அந்நாட்டின்  சுரங்கங்களில் இருந்து பல்வேறு கனிமங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றன.  அதன்படி இந்த ஆயுதக்குழுவால் நியமிக்கப்பட்ட வடக்கு கிவு மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் லுபும்பா காம்பெரே முயிசா வெள்ளிக்கிழமை நடத்திய செய்தியாளர் சந்திப்பில் ருபாயா சுரங்க விபத்து குறித்த தகவலை தெரிவித்தார். காங்கோவில் டாண்டலம் (coltan-கோல்டன்), கோபால்ட், தாமிரம், வைரங்கள், தங்கம், தகரம் மற்றும் யுரேனியம் போன்ற பல உலோக கனிம வளங்கள் நிறைந்துள்ளன. இந்த டாண்டலமானது மொபைல் போன்கள், கணினிகள், விண்வெளி பாகங்கள் மற்றும் எரிவாயு விசையாழிகள் (gas turbines) தயாரிப்பில் அதிக தேவையுள்ள முக்கிய கணிமமாக உள்ளது.  உலகளவில் நடக்கும் டாண்டலம்  உற்பத்தியின் மொத்த அளவில் சுமார் 15 சதவிகிதம் இந்த ருபாயா சுரங்கத்தில் இருந்து தான் எடுக்கப்படுகிறது. உள்ளூர் மக்கள் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும்  இல்லாமல் வெறும் கைகளால் இந்த சுரங்கத்தை தோண்டி  வேலை செய்ய வேண்டும்.  இந்த பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களக்கு அவர்களது தேவையை கூட நிறைவேற்றிக்கொள்ள முடியாத வகையில் சொற்ப சம்பளம் மட்டுமே வழங்கப்படும்.  இந்த சுரங்கமானது 2024 முதல் ஏஎப்சி/எம்23 ஆயு தக்குழுவின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. ஜன. 28,புதன்கிழமை ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் சுரங்கத் தொழிலாளர்கள், குழந்தைகள், பெண்கள் என சுமார் 200-க்கும் மேற்பட்டோர் சிக்கிப் பரிதாபமாக பலியாகியுள்ளனர். சிலர் மட்டுமே  மீட்கப்பட்டு பலத்த காயங்க ளுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  தற்போது அந்நாட்டில் மழைக்காலம் என்பதால் மண் நெகிழ்வாக உள்ள நிலையில் மிக மோசமான ஆபத்தான நிலச்சரிவுகள் பல சுரங்கங்களில் ஏற்பட்டு வருகின்றன. தற்போது வரை 227 பேர் பலியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும். ருவாண்டாவில் உள்ள எம்23 ஆயுதக்குழு, தங்களின் உள்நாட்டுப்போர் நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியை திரட்ட ருபாயாவின் கனிம வளங்களைச் சுரண்டி வருகிறது என ஏற்கெனவே  ஐ.நா அவை குற்றம் சாட்டியுள்ளது.  இந்த ஆயுதக்குழுவானது காங்கோ அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான முயற்சியில் உள்ளது. கடந்த ஆண்டு தாதுக்கள் நிறைந்த பல பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.