கார்த்தி வித்யாலயா பள்ளியில் மாநில அளவிலான ட்ரிப் பால் போட்டி
21 Dec 2025, 3:21 pm
<p><strong>கார்த்தி வித்யாலயா பள்ளியில் மாநில அளவிலான ட்ரிப் பால் போட்டி</strong></p>
<p>கும்பகோணம், டிச.21- தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில், தமிழ்நாடு ட்ரிப்பால் அசோசியேஷன் மற்றும் கார்த்தி வித்யாலயா கல்வி குழுமம் இணைந்து மாநில அளவிலான ட்ரிப் பால் போட்டி நடைபெற்றது. போட்டியில் கும்பகோணம் பகுதியைச் சுற்றியுள்ள பள்ளிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். போட்டியினை கார்த்தி வித்யாலயா கல்வி குழும தலைவர் கார்த்திகேயன் துவங்கி வைத்தார். இப்போட்டி 15 வயதிற்குட்பட்ட மாணவர்கள், 17 வயதிற்குட்பட்ட மாணவர்கள் என இரு பிரிவாக நடைபெற்றது. போட்டியில் தகுதி பெறும் மாணவர்கள் தேசிய அளவில் நடைபெறும் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். போட்டியில் பங்கு பெற்ற மாணவ-மாணவியர்களை பாராட்டி, பன்னாட்டு பள்ளி தாளாளர் பூர்ணிமா சான்றிதழ்கள் மற்றும் சிறப்பாக செயல்பட்டு முதல் மூன்று இடம் பிடித்த குழந்தைகளுக்கு பதக்கங்களை வழங்கினார். மாநில அளவில் நடைபெறும் போட்டியை ஏற்பாடு செய்திருந்த பள்ளி தலைவர் கார்த்திகேயனுக்கு, பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர்.</p>
