முந்தய பக்கம்

மாநில அளவிலான சப்-ஜூனியர் ரோல் பால் போட்டி

14 Aug 2026, 9:31 pm
மாநில அளவிலான சப்-ஜூனியர் ரோல் பால் போட்டி

மாநில அளவிலான சப்-ஜூனியர் ரோல் பால் போட்டி

திருச்சிராப்பள்ளி, ஆக. 14- திருச்சியில் தமிழ்நாடு மாநில அளவிலான 13 ஆவது சப்-ஜூனியர் ரோல் பால் சாம்பியன்ஷிப் போட்டிகள், உடையான்பட்டியில் உள்ள சாய் ஜி ரோல் பால் ஸ்கேட்டிங் அகாடமி மைதானத்தில் ஆக. 14 (வெள்ளிக்கிழமை) தொடங்கி ஆக.16 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இப்போட்டியை `ஸ்போர்ட்ஸ் தமிழ்நாடு ரோல் பால் அசோசியேஷன்’ அமைப்பும், `திருச்சிராப்பள்ளி மாவட்ட சாய் ஜி ரோல் பால் அசோசியேஷன்’ அமைப்பும் இணைந்து நடத்துகின்றன.

​விளையாட்டு போட்டியின் தொடக்க விழாவில், ஸ்போர்ட்ஸ் தமிழ்நாடு ரோல் பால் அசோசியேஷன் தலைவர் பி. செல்லமுத்து வரவேற்புரையாற்றினார். ஈஸ்வரி குழும நிறுவனங்களின் தலைவர் கே.டி. சிவசண்முகம் போட்டிகளைத் தொடங்கி வைத்தார். தென்னிந்திய ஒருங்கிணைப்பாளர் எம்.பி. சுப்பிரமணியன், சர்வதேச ரோல் பால் சங்க இயக்குனர் ஆர். ஸ்டீபன் டேவிட், திருச்சி வேலம்மாள் போதி வளாக முதல்வர் பி. வித்யா, நிர்வாக அதிகாரி கே. சதீஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஒ. ஞானசுகந்தி, ஸ்போர்ட்ஸ் தமிழ்நாடு ரோல் பால் அசோசியேஷன் மாநில துணைத் தலைவர்கள் கே. சரவணன், எம். பிரேம்நாத், இந்திய ஆண்கள் அணி பயிற்சியாளருமான வி. ராஜசேகர் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.

மதுரை ரோல் பால் சங்கத் தலைவர் எம். ராபின் ராஜகாந்தன் நன்றி கூறினார். போட்டியின் நிறைவு நாளான ஆக. 16 ஆம் தேதி பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.

Share
FacebookXWhatsAppTelegram