மடத்துக்குளத்தில் மாநில களரி போட்டி சு.வெங்கடேசன் எம்பி., துவக்கிவைத்தார்
4 Oct 2026, 2:04 am

மடத்துக்குளத்தில் மாநில களரி போட்டி சு.வெங்கடேசன் எம்பி., துவக்கிவைத்தார்

உடுமலை, அக்.3-மடத்துக்குளத்தில் மாநில அளவிலான களரிப் போட்டி சனியன்று துவங்கியது. இதனை மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் துவக்கிவைத்தார்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் களரிப்பயட்டு அசோசியேஷன் ஆஃப் தமிழ்நாடு சார்பில்இ கணியூர் சாலை சோழமாதேவி மேட்டில் உள்ள அக்சரா மகாலில் 10 ஆவது மாநில அளவிலான களரி சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன.இந்தியன் களரிப்பயட்டு ஃபெடரேஷன் பொதுச்செயலாளர் டாக்டர் அன்பு நாயர் தலைமையில் நடைபெற்ற இப்போட்டியை, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தொடங்கி வைத்தார். களரிப்பயட்டு அசோசியேஷன் ஆஃப் தமிழ்நாடு செயலாளர் ஆசான் வீரமணி வரவேற்றார்.

சென்னை, செங்கல்பட்டு, கோவை, ஊட்டி, ஈரோடு, திண்டுக்கல், திருப்பூர், கன்னியாகுமரி, நாகர்கோவில், திருநெல்வேலி, பட்டுக்கோட்டை, சிவகங்கை, தென்காசி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் இதில், பங்கேற்றனர்.சுவடுகள், மெய்பயட்டு, கெட்டுக்காரி, உருமி வீசல், கேடயம், வாள், உருமி, ஹைகிக் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இப்போட்டிகள் நடைபெற்றன. கேரளாவை சேர்ந்த ஆசான்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் நடுவர்களாக பங்கேற்றனர்.