முந்தய பக்கம்

மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகள் சதுரங்கப் போட்டி

23 May 2026, 12:32 am
மாநில அளவிலான  மாற்றுத்திறனாளிகள் சதுரங்கப் போட்டி
<p><strong>மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகள் சதுரங்கப் போட்டி</strong> </p><p>சென்னை,மே 22- தமிழ்நாடு காதுகேளாதோர் சதுரங்கச் சங்கத்தின் 20-ஆம் ஆண்டு விழாவை திறந்தவெளி சதுரங்கப் போட்டி மதுரை விசாலாட்சிபுரத்தில் உள்ள ஒய்எம்சிஏ காமக் செவித்திறன் குறைபாடுடையோருக்கான மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது. சென்னை தமிழ்நாடு காதுகேளாதோர் சதுரங்கச் சங்கத்தின் தலைவர் ஜி. சுப்பிரமணி, பொதுச்செயலாளர் சுதர்சன் குமார் ஆகியோரின் வழிகாட்டுதலில் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சீனியர், ஜூனியர், சப்-ஜூனியர் பிரிவுகளில் மொத்தம் 60 மாணவ, மாணவிகள் மற்றும் வீரர், வீராங்கனைகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். போட்டியின் நிறைவில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்குப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கிக் கவுரவிக்கப்பட்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram