தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை மாநில அரசு நிறைவேற்ற வலியுறுத்தல்

9 Dec 2025, 4:25 pm
கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை  மாநில அரசு நிறைவேற்ற வலியுறுத்தல்
<p><strong>கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை &nbsp;மாநில அரசு நிறைவேற்ற வலியுறுத்தல்</strong></p> <p>தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் மாநில நிர்வாகிகள், மாநில வேளாண் துறை முதன்மை செயலாளரை நேரில் சந்தித்து, கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை மாநில அரசு நிறைவேற்றிட கோரி மனு அளித்தனர். சட்டமன்ற உறுப்பினர் நாகை.மாலி, மாநிலத் தலைவர் டி.ரவீந்திரன், மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: l கரும்பு உற்பத்தி செலவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது கட்டுபடியாகிற விலை இல்லாததால் விவ சாயிகள் கரும்பை கைவிட்டு மாற்று சாகுபடிக்கு மாறுகின்றனர். இதனால் தமிழ்நாட்டில் கரும்பு சாகுபடி பரப்பளவு தொடர்ந்து குறைந்து வரு கிறது. கரும்பு சாகுபடியை, சர்க்கரை துறையை மேம்படுத்திட மாநில அரசு அறிவித்தபடி 2025-26 ஆண்டுக்கு ஒரு டன் கரும்புக்கு ரூ.4000 விலை வழங்க வேண்டுகிறோம். l 2013-14, 2014-15, 2015-16, 2016-17 ஆகிய நான்கு ஆண்டுகளுக்கு மாநில அரசு அறிவித்த SAP கரும்புக்கான பரிந்துரை விலையை தனி யார் சர்க்கரை ஆலைகள் தரவில்லை; ரூ.1217 கோடி பாக்கி வைத்துள்ளனர். மாநில அரசு, மாநில சர்க்கரை துறை உயர்நீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து SAP பாக்கி ரூ.1217 கோடியை விவசாயிகளுக்கு பெற்றுத் தர வேண்டுகிறோம். lதமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து பெற்ற உத்தரவின்படி 2004-05, 2008-09 ஆண்டுகளுக்கு வழங்க வேண்டிய லாப பங்குத் தொகையை தரணி சர்க்கரை ஆலைகள், பெண்ணாடம் அம்பிகா, திருமண்டக்குடி ஆரூ ரான், அறந்தாங்கி &nbsp;இஐடி பாரி சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு தரவில்லை. மாநில சர்க்கரை துறை ஆணையர் சட்டப்படியான நடவடிக்கை எடுத்து 5 சதவீத லாப பங்குத் தொகையை விவ சாயிகளுக்கு &nbsp;வட்டியுடன் பெற்றுத் தர வேண்டு கிறோம். l மதுரை நேசனல், திருப்பூர் மாவட்டம் அமராவதி உள்ளிட்ட மூடியுள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை திறந்து செயல்படுத்திட வேண்டும். இதற்கு தேவையான நிதியை மாநில அரசு பெற்றுத் தர வேண்டுகிறோம். l திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை முழு மையாக புதுப்பித்திட தேவையான கடனுதவியை மாநில அரசு பெற்றுத் தர வேண்டுகிறோம். தரணி சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு 36 கோடி FRP பாக்கி வைத்துள்ளதை மாநில அரசு வட்டியுடன் விவசாயிகளுக்கு பெற்றுத் தர வேண்டும் என மாநில அரசை தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.