சுங்காங்கடையில் அறிவியல் பிரச்சாரம் உபகுழு மாநில மாநாடு
16 Jan 2026, 3:00 pm
<p><strong>சுங்காங்கடையில் அறிவியல் பிரச்சாரம் உபகுழு மாநில மாநாடு</strong></p>
<p>நாகர்கோவில், ஜன.16- கன்னியாகுமரி மாவட்டம் சுங்காங்கடை யில் உள்ள அறிவியல் இயக்க மாவட்ட அலு வலக வளாகத்தில், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் அறிவியல் பிரச்சார உபகுழு மாநில மாநாடு இரண்டு நாட்கள் மிகச் சிறப்பாக நடைபெற்றது. தொடக்க விழா மற்றும் பாராட்டு விழா நிகழ்வில் பிறீதி மற்றும் குழுவினரின் அறிவியல் பாடல் பாட நிகழ்வு தொடங்கியது. மாவட்ட இணைச் செயலாளர் சுசீலா மறைந்த ஆளுமை களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தினார். மாவட்ட இணைச் செயலாளர் ஜெனித் வரவேற் றார். மாவட்டத் தலைவர் பேரா. நாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் சிவஸ்ரீ ரமேஷ் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்திப் பேசினார். மாநாட்டைத் துவக்கி வைத்து மாவட்ட வனத்துறை அலுவலர் டாக்டர் அன்பு, கேரள சாஸ்திர சாகித்ய பரிஷத் அமைப்பின் மேனாள் மாநிலத் தலைவர் ரமேஷ், அகில இந்திய மக்கள் அறிவியல் இயக்க செயற்குழு உறுப்பினர் பேரா.மோகனா, ஓய்வுபெற்ற இஸ்ரோ விஞ்ஞானி செல்வம், மாநில துணைத் தலைவர் சசிகுமார் , மேனாள் பொதுச்செய லாளர்கள் தாமஸ் பிராங்கோ, அமலராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர். மாநில செயற்குழு உறுபினர் ஜினோபாய், பொதுகுழு உறுப்பினர் ஜாண்சிலி பாய், மலர் அமைப்பின் கவுரவத் தலைவர் செலி ன்மேரி, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்வில் ஹிரோஷிமா - நாகசாகி தினப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாநிலச் செயலாளர் ஜினிதா தலைமையிலும், துளிர் திறனறிதல் தேர்வில் சாதனை படைத்த வர்களுக்கு மாவட்ட துணைத் தலைவர் விஜய லெட்சுமி மாவட்டபொருளாளர் செல்லத்தங்கம் ஆகியோர் தலைமையிலும் பரிசு வழங்கிப் பாராட்டப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற பிரதிநிதிகள் மாநாட் டிற்கு அறிவியல் பிரச்சார இணை ஒருங்கி ணைப்பாளர் டாக்டர் சேதுராமன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் சசிகுமார் செயல்பாட்டு அறிக்கையைச் சமர்ப்பித்தார். ‘யூத் பார் சயின்ஸ்’ குழுவுக்கான அறிக்கையை அதன் ஒருங்கிணைப்பாளர் ராமமூர்த்தி தாக்கல் செய்தார். துளிர் இல்ல அறிக்கையை, ஒருங்கிணைப்பாளர் ஜினிதா சமர்ப்பித்தார். இந்த மாநாட்டில் ‘சயின்ஸ் ஜங்ஷன்’ நிகழ்வு மற்றும் எதிர்கால அறிவியல் பிரச்சாரத் திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மாநிலச் செயலாளர்கள் தியாகராஜன், பால கிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இறுதியாக, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் முகம்மது பாதுஷா நிறைவுரையாற்றினார். மாவட்டத் துணைத் தலைவர் டோமினிக் ராஜ் நன்றி கூறினார். இந்த இரண்டு நாள் மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் திர ளான அறிவியல் ஆர்வலர்கள் மற்றும் பிரதி நிதிகள் கலந்து கொண்டனர்.</p>
