நெல்லியாளம் நகராட்சிக்கு மாநில ஆதிதிராவிடர் நல ஆணையம் அதிரடி உத்தரவு!
18 Feb 2026, 3:04 pm
<p><strong>நெல்லியாளம் நகராட்சிக்கு மாநில ஆதிதிராவிடர் நல ஆணையம் அதிரடி உத்தரவு!</strong></p>
<p>உதகை, பிப். 18- நாரங்கா கடவு ஆற்றில் கான்கிரீட் பாலம் அமைப்பது தொடர்பான விசாரணையில், நெல்லியாளம் நகராட்சிக்கு மாநில ஆதிதி ராவிடர் நல ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட புளி யம்பாறை கிராமத்தில், நாரங்கா கடவு ஆற் றின் குறுக்கே கான்கிரீட் பாலம் அமைக்கக் கோரி கிராம மக்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு ஆதிதி ராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மாநில ஆணையத்தில் செவ்வாயன்று முக்கிய விசா ரணை நடைபெற்றது. இதில், புளியம்பாறை பகுதி மக்களின் நீண்டகாலக் கோரிக்கையை பரிசீலித்த ஆணையம், அடிப்படை வசதிகளை உறுதி செய்யும் நோக்கில் சம்பந்தப்பட்ட துறையி னருக்கு கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. இதன்படி, நெல்லியாளம் நகராட்சி நிர்வா கம், பாலம் அமைப்பதற்கான அனு மதியைப் பெற பரிவேஷ் (PARIVESH) இணை யதளத்தில் இன்னும் பத்து நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது தொடர்பான விரிவான அறிக்கையை ஆணையத்தில் தாக் கல் செய்ய வேண்டும். கான்கிரீட் பாலம் கட்டு வது குறித்து வனத்துறை தனது விரிவான அறிக்கையை உடனடியாகச் சமர்ப்பிக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக வரும் 06.03.2026 அன்று சம்பந்தப்பட்ட அனைத்துத் துறை உயர் அதிகாரிகளும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண் டும் என உத்தரவிட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் சமூக நீதியை நிலைநாட்ட அப்பகு தியில், மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதன்தொடர்ச்சி யாகவே, நிர்வாக ரீதியான இந்த நடவடிக் கைகள், நாரங்கா கடவு பகுதியில் பாலம் அமையும் கனவை நனவாக்கும் என்றும், இதன் மூலம் அப்பகுதி மக்களின் போக்கு வரத்துத் துயரம் விரைவில் நீங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p> </p>
