முந்தய பக்கம்

மாநில அளவிலான பீச் பென்காக்  சிலாட் போட்டி தொடங்கியது

14 Feb 2026, 4:33 pm
மாநில அளவிலான பீச் பென்காக்  சிலாட் போட்டி தொடங்கியது
<p><strong>மாநில அளவிலான பீச் பென்காக் &nbsp;சிலாட் போட்டி தொடங்கியது</strong></p> <p>கடலூர், பிப்.14- கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் மாநில அளவிலான 4-வது கடற்கரை பென்காக் சிலாட் சாம்பியன் போட்டி நடைபெற்றது. &nbsp;இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, தேசிய பென்காக் சிலாட் கூட்டமைப்பின் இணை செயலாளரும், தமிழ்நாடு பென்காக் சிலாட் சங்க பொது செயலாளருமான மகேஷ் பாபு ஆகியோர் தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி வைத்து போட்டியை தொடங்கி வைத்தனர். &nbsp;மாநகர தி.மு.க. செயலாளர் கே.எஸ்.ராஜா, தமிழ்நாடு பென்காக் சிலாட் சங்க பொருளாளர் கிருஷ்ணகுமார், மாவட்ட செயலாளர் இளையராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மதுரை, திருச்சி, விருதுநகர், தென்காசி உள்பட 28 மாவட்டங்களை சேர்ந்த 780 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடினர். 5 வயது முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான இந்த போட்டி, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டது. &nbsp;இந்த போட்டி சனிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக் கிழமையும் நடைபெறுகிறது நடக்கிறது. பின்னர் பரிசளிப்பு நடைபெற உள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram