முந்தய பக்கம்

உடல் உறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு அரசு மரியாதை

25 Nov 2025, 3:29 pm
உடல் உறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு அரசு மரியாதை
<p><strong>உடல் உறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு அரசு மரியாதை</strong></p> <p>கோவை, நவ.25- அன்னூரில் சாலை விபத் தில் உயிரிழந்தவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட தால் அரசு மரியாதையுடன் தக னம் செய்யப்பட்டது. கோவை, அன்னூர் அருகே குப்பனூர் ஒட்டக மண்டலம் கிரா மத்தை சேர்ந்தவர் நடராஜ் மகன் &nbsp;சதீஷ் (எ) சண்முகம் (40), அரசு ஒப்பந்த தாரர். கடந்த 22 ஆம் தேதியன்று பசூர் மொண் டிபாளையம் சாலையில் இருசக்கர வாகனத் தில் சென்று கொண்டிருந்தார். அப்போது &nbsp;இவருக்கு முன்னால் சென்ற தனியார் பள்ளி &nbsp;பேருந்து திடீரென பிரேக் போட்டதால் இவர் &nbsp;பேருந்தின் பின்பக்கம் மோதி படுகாயம் அடைந்தார். இதையடுத்து இவரை ஆம்பு லன்ஸ் மூலம் கோவையில் &nbsp;உள்ள தனியார் மருத்துவமனை யில் அனுமதித்து சிகிச்சை &nbsp;பெற்று வந்தார். இந்நிலையில் &nbsp;செவ்வாயன்று சிகிச்சை பல னின்றி சதீஷ் (எ) சண்முகம் மூளைச்சாவு அடைந்தார். இதைதொடர்ந்து இவரது உடல் உறுப்புகளை குடும் பத்தினர் தானம் செய்தனர். உடல் &nbsp; உறுப்புகள் தானம் செய்யப்பட்டதை தொடர்ந்து அன்னூர் வட்டாட்சியர் &nbsp;யமுனா, வருவாய் ஆய்வாளர் செந்தில் குமார், காவல் உதவி ஆய்வாளர் அப்துல் முத்தாலிப் மற்றும் போலீசார் சார்பில் &nbsp;இவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து &nbsp;அரசு மரியாதை செலுத்தப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram