ஸ்கேன் இந்தியா
21 Mar 2026, 2:42 pm

வாழையே வாழ்க்கை

உ.பி., மற்றும் பீகாரிலிருந்து தில்லியில் பல்வேறு கூலி வேலை களைச் செய்து வருபவர்களை எரிவாயுப் பற்றாக்குறைக் கடுமை யாகப் பாதித்திருக்கிறது. இவர்களில் பெரும்பாலானோருக்கு குடியிருக்க வீடுகள் இல்லை. இதனால் முகவரியும் இல்லை. கள்ளச்சந்தையில் தான் ஏற்கெனவே எரிவாயு உருளைகளை வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு உருளைக்கு ரூ.1,500 தந்து வந்த இவர்க ளுக்குத் தற்போது ரூ.3,000 கொடுக்கத் தயாராக இருந்தும் கிடைக்கவில்லை. பணம் படைத்தவர்களுக்கு எரிவாயு உருளை கிடைப்பதில் எந்தவித இடை யூறும் இல்லை என்று சொல்லும் இந்த சாதாரணத் தொழிலாளர்கள், கடந்த சில நாட்களாகவே வெந்தும் வேகாத பருப்பை யும், வாழைப்பழத்தையும் சாப்பிட்டுதான் ஓட்டிக் கொண்டிருக்கிறோம் என்கிறார்கள்.

அல்வாதான் கிடைக்கிறது

ஒன்றிய அரசு நிதியில் இயங்கும் பல்கலைக் ்கழகங்கள் மற்றும் அவற்றின் கீழ் இருக்கும் கல்லூரிகளில் 26 விழுக்காடு ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கு ஒன்றிய அரசுத் தரப் பில் எந்தவித முனைப்பும் இல்லை. வேண்டு மென்றே தேர்வுக்கான தகுதிகளில் முரண்பாடுகளை ஏற்படுத்துவதே பல்கலைக்கழக மானியக்குழு வின் வேலையாக இருந்து வருகிறது. இது உயர் கல்வி மட்டுமல்லாமல் ஆய்வுகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கல்வியாளர்கள் கருதுகின்றனர். தேர்வு முறையிலும் நேர்முகத் தேர்வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை இன்னும் நிறுத்தவில்லை. வேண்டியவர்களுக்கு வேலை தரவே இந்த நடைமுறையை விடாமல் வைத்திருக்கிறார்கள். ஒன்றிய அரசு மற்றும் பல் கலைக்கழக மானியக் குழுவின் இந்த நடவடிக்கை களின் பாதிப்பு வரும் ஆண்டுகளில் பெரும் அளவில் தெரிய வரும் என்றும் கல்வியாளர்கள் கூறுகிறார்கள்.

சாப்பாட்டுக்கு நெருக்கடி

மேற்கு ஆசியாவில் அமெரிக்கா-இஸ்ரேல் நடத்தி வரும் சட்டவிரோதத் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புகளில் எரிபொருள் பற்றிப் பெரும் விவாதம் நடந்து வருகிறது. அதேவேளை யில், இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு மீது தாக் கத்தை விளைவிக்கும் உரங்களின் தேவை பற்றிப் போதிய அளவில் பேசவில்லை. யூரியா தயாரிப்பு உலக எரிபொருள் சந்தையுடன் மிகவும் நெருக்கமான ஒன் றாகும். ஒவ்வொரு ஆண்டும் 40 மெட்ரிக் டன் அள விலான யூரியாவை இந்தியா பயன்படுத்துகிறது. உள்நாட்டில் யூரியா தயாரிப்பு என்பது ஆண்டுக்கு 30 மெட்ரிக் டன் என்ற அளவில் நிற்கிறது. கூடுதலா கத் தேவைப்படும் 10 மெட்ரின் டன் யூரியாவில் 60 விழுக்காட்டிற்கு மேல் பாரசீக வளைகுடா நாடுகளிட மிருந்துதான் இறக்குமதி செய்துள்ளோம். நடந்து வரும் போரால், யூரியாவின் விலை கடுமையாக உயர்ந் திருக்கிறது. இதனால் இந்தியாவில் உணவுப்பொருட்க ளின் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பட்டினியில் மக்கள்

கூட்டணிக் கட்சியான திப்ரா மோதாவை உடைக்கும் வேலை இன்னும் முழுமை யாக நடக்காததால் திரிபுரா பழங்குடி கவுன்சில் தேர்தல் அறிவிப்பு வெளியாகாமல் இருக்கிறது. திப்ரா மோதாவின் தலைமையிலான கவுன்சில் ஏராளமான முறைகேடுகளைச் செய்தி ருக்கிறது. இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தலைவரும், பழங்குடி கவுன்சிலின் முன்னாள் தலைவருமான ராதா சரண் தேப்பர்மா அம்பலப் படுத்தியிருக்கிறார். இடது முன்னணி அதிகாரத்தில் இருந்த போது உருவாக்கப்பட்ட வீடுகள், உணவகங் கள், நீர் நிலைகள், திரையரங்கம் உள்ளிட்ட பல கவுன்சில் சொத்துகள் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டுள் ளன. சாலைகள் சிதைந்து போய்க் கிடக்கின்றன. லஞ்சம், ஊழலால் கட்டுமானப்பணிகள் தரமற்றவையாக உள்ளன. ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியம் தராமல் அவர்களைப் பட்டினி போட்டுவிட்டு, கவுன்சில் நிதியில் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள்.