ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் மருத்துவர்கள் சாதனை! இருவருக்கு இலவச இருதய அறுவைச் சிகிச்சை
28 May 2026, 10:43 pm

ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் மருத்துவர்கள் சாதனை! இருவருக்கு இலவச இருதய அறுவைச் சிகிச்சை

சென்னை, மே 28- சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவ மனையில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இரு வருக்கு அரிய மற்றும் சிக்கலான இருதய அறுவைச் சிகிச்சைகள் முழுமையாக, முற்றிலும் இலவசமாக வெற்றிகரமாகச் செய்யப்பட்டுள்ளன. அரிய கட்டி அகற்றம் கடுமையான மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட வியா சர்பாடியைச் சேர்ந்த பிரான்சிஸ் மேரி (61) என்ற பெண்ணின் இதய இடது மேலறையில் இருந்த 4.5 × 2.5 செ.மீ அளவிலான அரிய வகைக் கட்டி, திறந்த இருதய அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இதய வால்வு தொற்றால் பாதிக்கப்பட்ட விழுப்புரத்தைச் சேர்ந்த தொழிலாளி காமராஜ் (59) என்பவருக்குச் சேதமடைந்த ‘மைட்ரல் வால்வு’ வெற்றிகரமாக மாற்றிய மைக்கப்பட்டது. தனியார் மருத்துவமனைகளில் சுமார் ரூ.18 லட்சம் வரை செலவாகும் இந்த அதி நவீன சிகிச்சைகளை, மருத்துவமனை டீன் டாக்டர் ஏ. அரவிந்த்தின் திறமையான வழி காட்டுதலில், ஆர்எம்ஓ வனிதா மலர், மெடிக்கல் சூப்பரடெண்ட் ஜோதிகுமார், இதய அறுவைச் சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் கே.எஸ். சரவணா கிருஷ்ண ராஜா தலைமையிலான அறுவைச் சிகிச்சை குழுவினரும், டாக்டர் வி.ஜே. கார்த்திக், டாக்டர் அகிலா தலைமையிலான மயக்கவியல் குழுவி னரும் இணைந்து இந்த இமாலய சாத னையை நிகழ்த்தியுள்ளனர்.