ஸ்டேன்ஸ் மில் தியாகிகளின் நினைவுக் கல்வெட்டு திறப்பு!
1 hour before
<p>கோவை ஸ்டேன்ஸ் மில் தியாகிகளின் 80-ஆவது நினைவு தினத்தையொட்டி, தியாகிகள் உயிர்நீத்த அதே இடத்தில் சிஐடியு மற்றும் ஏஐடியுசி சார்பில் நினைவுக் கல்வெட்டு அமைக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டது.</p><p>இரண்டாம் உலகப் போர் நிறைவடைந்த 1946 நவம்பர் 11 அன்று, உழைப்புச் சுரண்டலை எதிர்த்துப் போராடிய கோவை ஸ்டேன்ஸ் மில் தொழிலாளர்கள் மீது பிரிட்டிஷ் ஆட்சியில் ஏவப்பட்ட கொடூர அடக்குமுறையில், கர்ப்பிணித் பெண் பாப்பம்மாள் மற்றும் அம்மு கோபால் உள்ளிட்ட பெண் தொழிலாளர்கள் தாக்கப்பட்டு, காவல்துறையின் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் மந்திரியப்பன், குள்ளப்பன், பழனியப்பன், ஆர்.கிருஷ்ணமூர்த்தி உள்பட 11 தோழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களின் உடல்களும் ஆலை வளாகத்திலேயே எரித்துச் சாம்பலாக்கப்பட்டன. இந்திய தொழிற்சங்க வரலாற்றில் உழைக்கும் வர்க்கத்தின் உரிமைக்காக துப்பாக்கிச் சூட்டிற்குநெஞ்சைக் காட்டி வீரமரணம் அடைந்த ஸ்டேன்ஸ் மில் தியாகிகளின் 80-ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்விற்குத் மில் தொழிலாளர் சங்கத் தலைவர் சி.பத்மநாபன் மற்றும் ஏஐடியுசி தலைவர் தங்கவேல் ஆகியோர் தலைமை தாங்கினர். சிஐடியு கொடியை கே.எஸ்.கனகராஜும், ஏஐடியுசி கொடியை தங்கவேலும் ஏற்றி வைத்தனர். தியாகிகள் உயிர்நீத்த அதே இடத்தில் சிஐடியு மற்றும் ஏஐடியுசி சார்பில் நினைவுக் கல்வெட்டு அமைக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டது.</p><p>கல்வெட்டை சிஐடியு சார்பில் சி.பத்மநாபனும், ஏஐடியுசி மூத்த தலைவர்களில் ஒருவரான வழக்கறிஞர் சுப்பிரமணியனும் இணைந்து திறந்து வைத்து ஸ்டேன்ஸ் மில் தியாகிகளின் தியாக வரலாறு குறித்து சிறப்புரையாற்றினர்.</p>
