மதவெறி அரசியலை வீழ்த்தச் சட்டமன்றக் களத்தில் நிற்கிறேன்: தொல். திருமாவளவன்
2 Apr 2026, 5:30 am

மதவெறி அரசியலை வீழ்த்தச் சட்டமன்றக் களத்தில் நிற்கிறேன்: தொல். திருமாவளவன்

புதுச்சேரி 'மாடல்'... தில்லிக்கு 'நோடல்'! ரங்கசாமியின் வினோத அரசியல் வித்தைகள்! 'புதுச்சேரியில் எல்லாம் ஒரு மாடல்' என்று ஆரம்பித்து, 'தில்லி சொல்வதை கேட்டால்தான் எல்லாம் நடக்கும்' என்று முடித்திருக்கிறார் புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி.

பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, அவர் ஆடிய நாடகங்கள் அனிச்சையாக நேர்காணல் புதுச்சேரி அரசியலில் ஒரு புதுவிதமான 'சண்டை' அரசியலை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

அதிகாரம் இல்லாத முதல்வர்? நேர்காணல் முழுவதும் ரங்கசாமியின் பிரதான புலம்பல் 'அதிகாரம்' பற்றியே இருக்கிறது. ஒரு முழுமையான மாநில அந்தஸ்து இல்லாததால் துணைநிலை ஆளுநரின் அலுவலகத்திற்குப் போய் காத்திருக்க வேண்டியிருப்பதாகக் குமுறுகிறார். ஆனால், வேடிக்கை என்னவென்றால், எந்த பாஜக ஒன்றிய அரசு மாநில அந்தஸ்து தர முடியாது என்று பிடிவாதமாக இருக்கிறதோ, அதே பாஜகவுடன் தான் அவர் கூட்டணியில் இருக்கிறார்.