தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வெற்றியைத் தவற விட்டதில் 3.52% வாக்குகளே வித்தியாசம் வலிமையான எதிர்க்கட்சியாக மக்களுக்கான

5 May 2026, 10:07 pm
வெற்றியைத் தவற விட்டதில் 3.52% வாக்குகளே வித்தியாசம் வலிமையான எதிர்க்கட்சியாக மக்களுக்கான

வெற்றியைத் தவற விட்டதில் 3.52% வாக்குகளே வித்தியாசம் வலிமையான எதிர்க்கட்சியாக மக்களுக்கான அரசியலைத் தொடர்வோம்; மீண்டும் வெல்வோம்!

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை

சென்னை, மே 5 - “வெற்றியைத் தவற விட்டதில் 3.52 சதவிகித வாக்குகளே வித்தியாசம்”, என்றும்; “மக்களாட்சி யில் மக்களே நம் வணக்கத்துக்குரியவர்கள் என்ற அடிப்படையில், அவர்களுக்கான அரசியலைத் தொடர்வோம்; மீண்டும் வெல்வோம்!” என்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கட்சியினருக்கு ஊக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக, தமது சமூகவலைதளப் பக்கத்தில், திமுக தொண்டர்களை ஊக்கப்படுத் தும் வகையில் அறிக்கை ஒன்றை மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

திமுக கூட்டணிக்கு கிடைத்த 1.54 கோடி வாக்குகள்

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர் களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனை வருக்கும் எனது மனமார்ந்த நன்றியை உண்மை உணர்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவரின் ஒவ்வொரு வாக்கை யும் விலைமதிப்பற்ற நம்பிக்கையாக நான் கருதுகிறேன்.

இப்போது வரை கிடைத்துள்ள புள்ளிவிபரங் களின்படி தி.மு.க. கூட்டணிக்கு 1 கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 782 வாக்குகள் கிடைத்து உள்ளன. இம்மக்கள் அனைவருக்கும் எனது நெஞ் சார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள் கிறேன்.

17.43 லட்சம் வாக்குகளில் நழுவிய வெற்றி வாய்ப்பு

கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சி யானது, நம்மை விட 17.43 லட்சம் வாக்குகளை மட்டுமே கூடுதலாகப் பெற்றுள்ளது. நமக்கும் அவர் களுக்குமான வாக்கு விழுக்காடு வேறுபாடு என்பது 3.52 விழுக்காடு மட்டுமே. என்னைப் பொறுத்த வரையில் தமிழ்நாட்டு மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை வலிமையானதாகவே கருதுகிறேன். நமக்கு வாக்களித்த மக்களுக்கு நேரடியாகச் சென்று நன்றி தெரிவிக்கும் கடமையை நாம் எப்போதும் செய்து வருகிறோம். அந்த வகையில் திமுக சார்பில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனை வரும், உடனடியாக வாக்களித்த மக்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள் கிறேன்.

மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவியுங்கள்

மக்களாட்சியில் மக்களே நம் வணக்கத்துக்குரி யவர்கள். அவர்களுக்காகவே நாம் கட்சி நடத்து கிறோம். அவர்களுக்காகவே நாம் அரசியலில் இயங்குகிறோம். எனவே, அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிக்க நேரில் செல்லுமாறு அனைத்து வேட்பாளர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

திமுக 6 முறை ஆட்சியில் இருந்துள்ளது. நாம் பார்க்காத வெற்றியும் இல்லை; நாம் சந்திக்காத தோல்வியும் இல்லை. அரசியல் பொதுவாழ்வில் கொள்கையைக் காக்கும் பயணத்தில் நமது கொள்கை தோல்வி அடைந்துவிடக் கூடாது என்பதில் தான் நாம் எப்போதும் கவனமாக இருப்போம். தொண்டர்களின் வலிமையால் நான் வலிமை பெறுகிறேன் எனக்கு ஆறுதல் சொல்லி பலரும் குறுஞ்செய்தி அனுப்பி வைத்து வருகிறீர்கள். உங்களால் உரு வாக்கப்பட்ட எனக்கு, உங்களது வலிமையால் வலிமை பெற்ற எனக்கு நீங்கள் உடனிருக்கும் வரை என்ன கவலை? நாம் அனைவரும் தலை வர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள். அந்த உணர்வோடு தொடர்ந்து நாம் பயணிப்போம்.

உங்கள் உழைப்பால் விளைந்த அறுவடை தான் 1.54 கோடி வாக்குகள். உங்கள் உழைப்புக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்? தலை மைத் தொண்டன் என்ற உணர்வோடு நாம் தொடர்ந்து பயணிப்போம்.

பயணத்தைத் தொடர்வோம்; மீண்டும் வெல்வோம்!

ஆளும் கட்சியாக இருந்தால் மக்களுக்கான திட்டங்களைத் தீட்டுவோம். எதிர்க்கட்சியாக இருந் தால் மக்களுக்கான கோரிக்கைகளுக்காகவே போராடுவோம். அந்த வகையில் இப்போது வலிமை யான எதிர்க்கட்சியாக இருந்து மக்களுக்கான அர சியலை நாம் தொடர்வோம். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் வழித்தடத்தில், நூறாண்டு கண்ட திராவிடப் பேரியக்கத்தின் கொள்கைகளைச் செயல்படுத்த, இனம் - மொழி - நாடு காக்கும் பய ணத்தைத் தொடர்வோம். நமது பயணத்தில் எவரை யும் பின்தங்க நான் விட மாட்டேன். மீண்டும் வெல்வோம்!. இவ்வாறு மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.