முந்தய பக்கம்

‘குதிரை வேக’த்தில் ‘குதிரை பேரம்’!

25 May 2026, 9:34 pm
‘குதிரை வேக’த்தில்  ‘குதிரை பேரம்’!
<p><strong>‘குதிரை வேக’த்தில் ‘குதிரை பேரம்’!</strong> </p><p>மு.க. ஸ்டாலின் சாடல் அதிமுகவைச் சேர்ந்த 3 பேர், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெக-வில் இணைந்திருப்பதை முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார். “பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது; நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது; அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது; இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். “‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram