கண்டரமாணிக்கத்தில் “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாம்
27 Dec 2025, 4:49 pm
<p><strong>கண்டரமாணிக்கத்தில் “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாம்</strong></p>
<p>சிவகங்கை, டிச.27- சிவகங்கை மாவட்டம், கல்லல் வட்டா ரத்திற்கு உட்பட்ட கண்டரமாணிக்கம், சேது இராணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் நடைபெற்ற “நலம் காக் கும் ஸ்டாலின்” திட்டத்தின் சிறப்பு மருத்துவ முகாமினை, தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற் கொடி தலைமையில் நடைபெற்ற இந்நிக ழ்ச்சியில், முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் ப. சிதம்பரம் முன்னிலை வகித்தார். இம்முகா மில், கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச் சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டதுடன், மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. இம்முகாமின் வாயிலாக, 12 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங் கள், 6 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பேருந்து மற்றும் ரயில் பயண அட்டைகள், ஒரு மாணவருக்கு மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, ரூ.9,500 மதிப்பீட்டில் ஒரு சிறப்பு சக்கர நாற்காலி உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டன. மேலும், 35 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டைகள், 95 பேருக்கு மருத்துவ பயண சலுகை அட்டைகள் உள்ளிட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) அருள்தாஸ், மாவட்ட சுகாதார அலுவலர் எஸ்.மீனாட்சி, மாவட்ட கல்வி அலுவலர் செந்தில்குமார், சேது பாஸ்கரா கல்விக் குழும தலைவர் சேதுகுமணன், திருப்பத்தூர் வட்டாட்சியர் மாணிக்கவாசகம், வட்டார மருத்துவ அலு வலர் ஜெ.ஆல்வின், பள்ளி முதல்வர் ரொச ரியோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.</p>
