நீட் மறுதேர்வு முடிவைக் கைவிடுக! பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
15 May 2026, 10:17 pm

நீட் மறுதேர்வு முடிவைக் கைவிடுக! பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை, மே 15 - 2026 ஆம் ஆண்டு நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், நீட் மறுதேர்வு நடத்தும் முடிவைக் கைவிட வேண்டும் என்றும், பள்ளி இறுதியாண்டு மதிப்பெண்கள் அடிப்படையில் மாநில அரசுகளே மருத்துவப் படிப்பு சேர்க்கையை மேற்கொள்ள அனுமதிக்க அவசரச் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிர தமர் மோடிக்கு கடிதம் எழுதியுள் ளார்.

இதுகுறித்து தனது கடிதத்தில் ஸ்டாலின், “வினாத்தாள் கசிவை தொடர்ந்து பல மாநிலங்களைச் சேர்ந்த 45 பேர் கைது செய்யப் பட்டு சிபிஐ விசாரணை நடை பெற்று வருகிறது. 22.8 லட்சம் மாண வர்கள் தங்கள் எதிர்காலம் என்ன வாகும் என தெரியாமல் தவிக்கின்ற னர்.

2015 முதல் 2024 வரையிலான ஆண்டுகளில் நீட் தேர்வில் வினாத் தாள் கசிவு, ஆள்மாறாட்டம், கருணை மதிப்பெண் மோசடி, போலித் தேர்வர்கள் என தொடர்ந்து முறைகேடுகள் நடைபெற்று வரு கின்றன.

ஒரே தேர்வு மையத்தில் பல டாப்பர்கள் தோன்றியதும், 30 முதல் 50 லட்சம் ரூபாய் கொடுத்து வினாத்தாளை முன்கூட்டியே பெற்றதும் 2024 தேர்வில் அம்பல மானது.

நீட் தேர்வு ஏழை, கிராமப்புற, அரசுப் பள்ளி மற்றும் தமிழ் வழி மாணவர்களுக்கு எதிரானது என் றும், நீட் சார்ந்த பயிற்சி மையத் தொழிலில் 70 ஆயிரம் கோடி ரூபாய் வரை புரளும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

நீட் தேர்வை ஒட்டுமொத்த மாக ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து முன் வைப்பதாகவும், தற்போதைய அசாதாரண சூழலில் 2026-27 கல்வியாண்டிற்கு மட்டுமாவது தேசிய மருத்துவ ஆணையச் சட்டத் தின் 14ஆம் பிரிவை திருத்தி அவசரச் சட்டம் இயற்ற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.