“மக்களைத் திசை திருப்பாதீர்கள்” முதலமைச்சர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்தும், கண்டனமும்
10 May 2026, 11:05 pm

“மக்களைத் திசை திருப்பாதீர்கள்” முதலமைச்சர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்தும், கண்டனமும்

சென்னை, மே 10 - தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் சி. ஜோசப் விஜய்க்கு திமுக தலைவரும், முன்னாள் முதல மைச்சருமான மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், கடந்த கால நிதிநிலை குறித்த முதலமைச் சரின் விமர்சனங்களுக்கு அவர் கண்டனத் தையும் பதிலடியையும் கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது: வாழ்த்துக்களும் வரவேற்பும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்ச ராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் அவர் களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்து களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர் பதவியேற்றதும் கையெழுத்திட் டுள்ள மக்கள் நலன் சார்ந்த அறிவிப்பு களை வரவேற்கிறேன்.

ஆட்சித் திறமைதான் முக்கியம் எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை என்று பேச ஆரம்பிக்க வேண் டாம்.

மக்களுக்குக் கொடுக்க வேண்டும் என்கிற மனமும், அதற்கான ஆட்சித் திற மையும்தான் வேண்டும்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் கோவிட் பெருந்தொற்று, இயற்கைச் சீற்றங்கள் மற்றும் ஒன்றிய பாஜக அரசின் ஓரவஞ்சனை எனப் பல நெருக்கடிகளைச் சமாளித்துதான் நாங்கள் எண்ணற்ற மக்கள் நலத் திட்டங் களை நிறைவேற்றினோம் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.

முந்தைய அரசு 10 லட்சம் கோடி ரூபாய் கடனை வைத்துவிட்டுச் சென்று உள்ளது என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே முதலமைச்சர் விஜய் சொல்லியிருக்கிறார்.

தமிழ்நாட்டின் கடன் அளவு என்பது அனுமதிக்கப் பட்ட வரம்புக்கு உட்பட்டே இருக்கிறது.

அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்டிலேயே நாங்கள் மிகத் தெளிவாக விளக்கியிருந்தோம்.

அது தெரிந்த பிறகுதானே நீங்கள் மக்களுக் குப் பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத் தீர்கள்? இப்போது நிர்வாகத்திற்குள் வந்த பிறகு, வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றித் திசைதிருப்ப வேண்டாம்.

வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் “நடைமுறைக்குச் சாத்தியமான வற்றை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள், இப்போதுதான் அரசு நிர்வாகத்திற்குள் அடியெ டுத்து வைக்கிறீர்கள்.

கூடிய விரை வில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி களை எப்படி நிறைவேற்றலாம் என்கிற நுணுக்கங்களை நீங்களும் கற்றுக்கொள் வீர்கள் என நம்புகிறேன்.

தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள். இவ்வாறு மு.க. ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.