விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை தவெக அரசு மிரட்டுகிறது!
1 hour before
<p><strong>விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை தவெக அரசு மிரட்டுகிறது!</strong></p><p>மு.க. ஸ்டாலின் கண்டனம் சென்னை, ஜூன் 29 - தவெக அரசை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை அரசு மிரட்டுவ தாக, முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டா லின் கண்டனம் தெரிவித்துள்ளார். தவெக அமைச்சரவையில் மனித வள மேலாண்மைத் துறை அமைச்ச ராக உள்ள டி. சரத்குமார், பொது இடத்தில் போதைப்பொருள் பயன்ப டுத்துவது போல் தோன்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அமைச்சர் சரத்குமார், தனது குழந்தைக்கு மாத்திரையை பொடி யாக்கி கொடுத்ததாக விளக்கம் அளித் தார். இந்த விளக்கம் ஏற்புடைய தாக இல்லை. இந்நிலையில், அமைச் சரை பதவி நீக்கம் செய்யக்கோரி மாவட்டத் தலைநகரங்களில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்தது. சென்னை எழும்பூரில் திமுக மாணவர் அணியினர் ஆர்ப்பாட்டத்திற் கான மேடை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அனுமதி இல்லா மல் மேடை அமைக்க முடியாது என போலீசார் தடுத்தனர். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர் களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனையடுத்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட மு.க. ஸ்டா லின், போதைப் பொருள் பயன்படுத் தியது போல் ‘தக் லைப்’ (“Thug Life”) Story போட்ட அமைச்சருக்கு எதிராகப் போராட்டம் செய்த திமுக வினர் கைது செய்யப்பட்டதையும், தவெக ஆட்சியை விமர்சித்ததால் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதை யும், முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறு எதிர்க்கட்சிகளை மிரட்டி, ஊடகங்களுக்கு பதில் அளிக் காமல் தனது போலி பிம்பத்தை காப்பாற்றிக் கொள்ளும் முதலமைச் சரின் எண்ணம் நீண்டகாலம் நீடிக் காது என்றும், மக்களே பாடம் புகட்டு வார்கள் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.</p>
