தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

10 Oct 2026, 10:24 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலையா?

தலைவர்கள் கைதுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்சென்னை: தில்லியில் தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:மக்களின் வாக்குரிமையைப் பாதுகாக்கப் போராடும் முன்னாள் முதலமைச்சர்கள் - பினராயி விஜயன், அரவிந்த்கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி, மாணிக் சர்க்கார், சிபிஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி மற்றும் பல்வேறு மாணவர் அமைப்புகளின் தலைவர்கள் ஆகியோரை ஒன்றிய பாஜக அரசு கைது செய்து தடுத்து வைத்துள்ளது.

ஆனால், தேசத்துரோகச் செயலுக்காக விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய தலைமைத் தேர்தல் ஆணையர்ஞானேஷ் குமார், ‘இசட் பிளஸ்’ பாதுகாப்புடன் சுதந்திரமாக உலா வருகிறார்! என்னே அவலம்!சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தமான SIR-இன் பின்னணியில் உள்ள சதித்திட்டம் முழுமையாக அம்பலமாகிவிட்டது. இனி எதையும் மறைக்க முடியாது! தில்லியைச் சுற்றிலும் தடுப்பரண்களை அமைப்பதாலும், இணையச் சேவைகளை முடக்குவதாலும், அரசியல் தலைவர்களைக் கைது செய்து தடுத்து வைப்பதாலும், இந்திய இளைஞர்களின்எழுச்சியை ஒடுக்கிவிட முடியாது.

ஒட்டுமொத்த நாட்டையும் எத்தனை காலத்திற்கு முற்றுகைக்குள் வைத்திருக்க முடியும்?

இதற்கிடையில், தமிழகத்தில் ஆட்சியில் உள்ள தவெக அரசும் எஸ்ஐஆரை எதிர்த்தும், ஞானேஷ் குமாரின் பதவி விலகலை வலியுறுத்தியும் போராடும் செயற்பாட்டாளர்களைக் கைது செய்து தடுத்து வைத்து வருகிறது. தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரும் உடனடியாக விடுதலைசெய்யப்பட வேண்டும்! ஞானேஷ் குமார் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும்! எஸ்ஐஆர் நடவடிக்கை உடனடியாகநிறுத்தப்பட வேண்டும்!இந்திய மக்களுக்குத் துரோகம் இழைத்த அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, உரிய முறையில் பொறுப்பேற்கச் செய்யப்பட வேண்டும்!இவ்வாறு மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.ஜனநாயகத்தைக் காப்பவர்களுக்குச் சிறை; ஜனநாயகத்தைக் காட்டிக்கொடுப்பவர்களுக்குப் பாதுகாப்பு! நாட்டில்அறிவிக்கப்படாத அவசரநிலையா? என்றும் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

முதல்வர் விஜய்யுடன் ராகுல் காந்தி சந்திப்பு

சென்னை: சென்னை வந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, முதலமைச்சர் விஜய்யின் நீலாங்

கரை இல்லத்தில் சந்தித்து ஆலோசனையும் நடத்திய பின்னர், இருவரும் இணைந்து உணவருந்தினர்.

பிரதமர் மோடி இன்று சென்னை வருகை

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்கப் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிறன்று சென்னை வரவுள்ள நிலையில், நகரம் முழுவதும் ஐந்தடுக்குப் பாதுகாப்புடன் 15,000 காவல்துறையினர்ஈடுபடுத்தப்பட்டுச் சிறப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சாதி விவரம் கட்டாயமில்லை

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களின் விண்ணப்பப் படிவங்களில் சாதி மற்றும் சமூக விவரங்களைக் கட்டாயமாகக் கேட்கக் கூடாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.