1,000 மினி பேருந்துகள், ரூ.10,000 கோடி டெக் பார்க்: சென்னைக்காக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட வாக்குறுதிகள்!
19 Apr 2026, 2:01 pm

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சென்னை மாநகரின் வளர்ச்சிக்காக "சென்னை சூப்பர்-6" எனும் பிரத்யேக தேர்தல் அறிக்கையை திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார்.

சென்னை சூப்பர் 6 திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்:

1.மேம்படுத்தப்பட்ட பொது வசதிகள்

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடிக் குடியிருப்புகளில் குடியிருப்போர் நல மகளிர் சங்கம் மூலம் அரசு நிதியுதவியுடன் பொது வசதிகள் மேம்படுத்தப்படும்.

மெட்ரோ குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகளுக்கு RO சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் மற்றும் மெட்ரோ குடிநீர் வசதி உள்ள குடியிருப்புகளுக்கு காலமுறைப்படி குடிநீர் விநியோகம் செய்யப்படும்.

அனைத்து குடியிருப்புக் பகுதிகளிலும் அதி ஒளி தெருவிளக்குகள் அமைக்கப்படும்.

கலை, இசை, இலக்கிய நிகழ்வுகளுக்கென ஒரு தனித்துவமான உலகத்தரம் வாய்ந்த கலாச்சார மையம் அமைக்கப்படும்.

2.சென்னை முழுவதும் சிறப்பான போக்குவரத்து

பேருந்து நிறுத்தங்கள், மெட்ரோ நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களுடன் ஒவ்வொரு தெருவையும் இணைக்கும் வகையில் 1,000 புதிய மினி பேருந்துகள் இயக்கப்படும்.

போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பயண நேரத்தை 25% வரை சேமிக்க செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் போக்குவரத்து மேலாண்மை நடைமுறைப்படுத்தப்படும்.

3.திட்டமிட்ட கால அளவில் உள்கட்டமைப்புத் திட்டங்கள்

எண்ணூர் முதல் பூஞ்சேரி வரையிலான சென்னை எல்லைச் சாலை திட்டம் போன்ற 10-க்கும் மேற்பட்ட முக்கியத் திட்டங்கள் 2027-க்குள் முடிக்கப்படும்.

மெட்ரோ விரிவாக்கப் பணிகள் 2028-க்குள் முடிக்கப்படும்.

மழைநீர் வடிகால்கள் 2028-க்குள் முடிக்கப்படும்.

பாதாளச் சாக்கடைத் திட்டம் 2027-க்குள் முடிக்கப்படும்.

அழகான சாலைகள், அகலமான நடைபாதைகள், நிழல் தரும் மரங்கள், அனைவரும் பயன்படுத்தக்கூடிய கழிப்பறை வசதிகள் என உலகத் தரத்தில் எழில்மிகு சாலை வசதிகள் 2029-க்குள் அமைக்கப்படும்.

4.மனிதாபிமானம், அறிவியல் முறையில் கைவிடப்பட்ட நாய்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு

விலங்குகள் பிறப்புக்கட்டுப்பாட்டு (ABC) திட்டத்தின் கீழ், கால்நடை மருத்துவர்கள் மற்றும் நாய் பிடிப்பவர்களின் எண்ணிக்கையை மூன்று மடங்கு அதிகரிக்கப்படும்.

தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் (NGOs) இணைந்து விரிவுபடுத்தப்பட்ட காப்பகங்கள் உருவாக்கப்படும்.

5.உலகளாவிய சிறப்பு மையம்

AI, Animation, Visual Effects, Gaming, and Immersive Technologies-க்கான சிறப்பு மையம்.

₹10 ஆயிரம் கோடி முதலீடு.

20,000 உயர் ஊதிய வேலைவாய்ப்புகள்.

6.உலகளாவிய திறப்பு மையம் (Global Talent Gateway)

உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு.

உயர்தரத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி.

ஆராய்ச்சி மையம்.

அதிக வருமானம் ஈட்டக்கூடிய வேலைவாய்ப்புகள்.

முன்னதாக, மாநிலம் முழுவதற்குமான பொதுவான தேர்தல் அறிக்கையில் மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயர்வு மற்றும் இல்லத்தரசிகளுக்கு ரூ.8,000 மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள் கூப்பன் போன்ற கவர்ச்சிகரமான அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.