தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உரிமைகளை அடகு வைத்த அதிமுகவிற்கு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள்! தென்காசி, விருதுநகரில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முழக்கம்

6 Apr 2026, 5:30 am

தென்காசி/விருதுநகர், ஏப். 3 - தமிழ்நாட்டின் மொழிவழிக் கொள்கையைத் திணிக்கத் துடிக்கும் பாஜகவின் முகமூடி ஒரு போதும் பலிக்காது என்றும், மாநில உரிமைகளை அடகு வைத்த அதிமுகவிற்கு மக்கள் இந்தத் தேர்தலில் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்றும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முழங்கினார்.

விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டத் சங்கரன்கோவிலில் நடைபெற்ற மாபெரும் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டங்களில் உரையாற்றிய அவர், ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்ததுடன், அதிமுகவின் துரோக அரசியலையும் அம்பலப்படுத்தினார்.

சங்கரன்கோவிலில் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர், பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளில் உள்ள ஆபத்துகளைச் சுட்டிக்காட்டினார். 'தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படும் என்று பாஜகவின் தேர்தல் செய்யறிக்கை கூறுகிறது. இது எதை உணர்த்துகிறது? மீண்டும் இந்தித் திணிப்பு மூலம் தமிழர்களின் அடையாளத்தை அழிக்க நினைக்கும் பாஜகவின் சதித்திட்டத்திற்கு அதிமுக ஆதரவு அளிப்பது அவமானம்' என்றார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.