முந்தய பக்கம்

தவெக ஆட்சியமைக்க திமுக இடையூறு செய்யாது மு.க. ஸ்டாலின் உறுதி

7 May 2026, 10:10 pm
தவெக ஆட்சியமைக்க திமுக இடையூறு செய்யாது மு.க. ஸ்டாலின் உறுதி
<p><strong>தவெக ஆட்சியமைக்க திமுக இடையூறு செய்யாது மு.க. ஸ்டாலின் உறுதி</strong></p><p>சென்னை, மே 7 - தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கு தி.மு.க. இடையூறு செய்யாது என்று அக்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெளிவுபடுத்தியுள்ளார். அரசியலமைப்பு நெருக்கடியோ அல்லது மறு தேர்தலுக்கான தேவையோ இருக்காது என்று நம்புவதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார். தவெக ஆட்சி அமைத்தால், அதனை 6 மாதங்கள் பொறுத்திருந்து பார்ப்போம் என்று கூறியிருக்கும் மு.க. ஸ்டாலின், திமுக அரசு செயல்படுத்திய நலத்திட்டங்களை, புதிய ஆட்சியும் தொடர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். குறிப்பாக, பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கும் அவர், பெண்களுக்கு மாதம் ரூ. 2,500 வழங்கப்படும் என்ற தவெகவின் வாக்குறுதியை செயல்படுத்துவது கடினம் என்று கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் இந்த அறிவிப்பு, இரவு முழுவதும் நீடித்த திமுக - அதிமுக கூட்டணி சாத்தியம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருப்பதாக அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.</p>
Share
FacebookXWhatsAppTelegram