நலம் காக்கும் ஸ்டாலின் முழு உடல் பரிசோதனை முகாம்
28 Dec 2025, 5:05 pm
<p><strong>நலம் காக்கும் ஸ்டாலின் முழு உடல் பரிசோதனை முகாம்</strong></p>
<p>கள்ளக்குறிச்சி, டிச. 28- கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட எம். குன்னத்தூர் ஊராட்சியில் தமிழக அரசின் சிறப்புத் திட்டமான ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமை உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜே. மணிக்கண்ணன் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தார். தொடர்ந்து முகாமைப் பார்வை யிட்டுப் பொதுமக்களிடம் நலம் விசாரித்து வழங்கப்பட்ட மருத்துவச் சேவைகள் குறித்துக் கேட்டறிந்தார். இந்த மருத்துவ முகாமில் பொது மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த சிறப்பு மருத்துவர்கள் வருகை புரிந்து இலவச மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்ட னர். நோயாளிகளுக்குத் தேவையான மருத்துவ ஆலோ சனைகள் வழங்கப்பட்டதுடன், மருந்துகளும் இலவசமாக வழங்கப்பட்டன. இதன் மூலம் கிராமப்புறத்தில் நாள்பட்ட நோய்களோடு அவதிப்பட்டு வந்த நோயாளிகள், வசதி யில்லாத ஏழை எளிய பொதுமக்களுக்கு இது பெரிதும் பயனுள்ள நிகழ்வாக இருந்தது எனப் பொதுமக்கள் கூறினர். இந்நிகழ்வில் உளுந்தூர்பேட்டை நகரமன்றத் துணைத் தலைவர் யூ.எஸ். வைத்தியநாதன், மாவட்டக் கவுன்சிலர் ராஜேஸ்வரி ராஜா, ஊராட்சி மன்றத் தலைவர் பால சிங்கம், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள், அரசுத் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பல்வேறு கிராமங் களில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் ஏராளமானோர் இதில் கலந்துகொண்டனர்.</p>
