புனித பேட்ரிக் பள்ளி மாணவர்கள் மருத்துவ நுழைவுத் தேர்வில் சாதனை
28 Oct 2026, 11:21 pm

புனித பேட்ரிக் பள்ளி மாணவர்கள் மருத்துவ நுழைவுத் தேர்வில் சாதனை

புதுச்சேரி,அக்.28-புதுச்சேரி புனித பேட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மருத்துவ நுழைவுத் தேர்வில் சாதனை படைத்துள்ளனர்.புதுச்சேரி சாரதம்பால் நகரில் உள்ள புனித பேட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயின்று, மருத்துவ நுழைவுத் தேர்வில் சாதனை புரிந்த 20 மாணவர்களையும் மற்றும் சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வில் பள்ளி அளவில் முதலிடம் பெற்ற 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களையும் கவுரவிக்கும் நிகழ்ச்சி பள்ளியின் வெள்ளி விழா கட்டடக் கலையரங்கில் நடை பெற்றது.

இந்நிகழ்ச்சியில் புதுவை மகாத்மா காந்தி பல் மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் பாலமுரளி கலந்து கொண்டு தேசிய அளவில் நடைபெற்ற மருத்துவ நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களையும் 2025 - 26ம் கல்வியாண்டில் நடைபெற்ற சி.பி.எஸ்.இ.,பொதுத்தேர்வில் பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களையும் கவுரவித்தார்.

மேலும், இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் பிரடெரிக் , பள்ளியின் மருத்துவ இயக்குநர் மருத்துவர் ஜீட்டா பிரடெரிக், பள்ளி முதல்வர் ஸ்டெல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியினை ஆசிரியை சந்தியா தொகுத்து வழங்கினார்.