தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வாய்ப்பு வாசல்

1 Apr 2026, 4:02 pm
வாய்ப்பு வாசல்

எஸ்எஸ்பி   கான்ஸ்டபிள்  827  பணியிடங்கள்

ஒன்றிய அரசின் பாதுகாப்புப் படையான SSB (Sashastra Seema Bal) அமைப்பில் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு மொத்தம் 827 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கல்வித் தகுதி – விண்ணப்பதாரர்கள் 10 - ஆம் வகுப்பு (SSLC) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சில பணியிடங்களுக்கு (Driver, Cook போன்றவை) தொடர்புடைய தொழில் திறன் அல்லது அனுபவம் இருக்கலாம். வயது வரம்பு – குறைந்த பட்சம்  18  முதல் அதிகபட்சம் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினர்களுக்கு 3 ஆண்டுகள், எஸ்சி/எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகள் மற்றும் பிற பிரிவினர்களுக்கு அரசு விதிப்படி வயது தளர்வு வழங்கப்படும்.  தேர்ந்தெடுக்கப்படும் முறை – தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, திறன் தேர்வு மற்றும் ஆவண சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பக் கட்டணம் – பொதுப்பிரிவினருக்கு ரூ.100. எஸ்சி/எஸ்டி/பெண்களுக்கு கட்டணம் இல்லை. விண்ணப்பிக்கும் முறை – இந்தப் பணியிடங்களுக்கான விண்ணப்பம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க  வேண்டும். கூடுதல் விபரங்கள் மற்றும் முழுமையான அறிவிக்கையைப் பெற https://ssb.gov.in/ என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி ஏப்ரல் 18,  2026 ஆகும்.

என்எச்பிசி - பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை (72)

ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான NHPC (National Hydroelectric Power Corporation) நிறுவனத்தில் Trainee Engineer பணியிடங்களுக்கு மொத்தம் 72 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கல்வித் தகுதி – B.E / B.Tech பட்டம் (Civil / Electrical / Mechanical) பெற்றிருக்க வேண்டும். மேலும் GATE தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு – அதிகபட்ச வயது 30 ஆகும். ஓபிசி பிரிவினர்களுக்கு 3 ஆண்டுகள், எஸ்சி/எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகள் மற்றும் பிற பிரிவினர்களுக்கு அரசு விதிப்படி வயது தளர்வு வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் முறை – தகுதியானவர்கள் GATE மதிப்பெண் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பக் கட்டணம் – ஓபிசி பிரிவினர்களுக்கு ரூ.600. எஸ்சி/எஸ்டி/பெண்களுக்கு கட்டணம் இல்லை. விண்ணப்பிக்கும் முறை –  இந்தப் பணியிடங்களுக்கான விண்ணப்பம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க  வேண்டும். கூடுதல் விபரங்கள் மற்றும் முழுமையான அறிவிக்கையைப் பெற https://www.nhpcindia.com/ என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி – ஏப்ரல் 6, 2026.

கடற்படையில் +2 படித்தவர்களுக்கு மாலுமிப் பணி

இந்திய கடற்படையில் மருத்துவ பிரிவில் Sailors (SSR Medical Branch) 02/2027  காலி பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கல்வித் தகுதி – கணிதம், இயற்பியல், வேதியல், உயிரியல் போன்ற  பாடங்கள் அடங்கிய பாடப் பிரிவில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் பெற்று +2 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தற்போது +2 படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு – குறைந்தபட்சம் 17 முதல் அதிகபட்சம் 21 வயதுக்குள் இருக்க வேண்டும்.  மே 1, 2005 - அக்டோபர் 31, 2009 இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் முறை – தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் ஆவண சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவர். INET (Indian Navy Entrance Test) மூலம் தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும் முதல் தேர்வானது மே 2026 இல் நடைபெறும் இரண்டாம் கட்ட தேர்வு மார்ச் 2027 இல் நடைபெறும். விண்ணப்பக் கட்டணம் –ரூ.550 செலுத்தி ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். இந்தப் பணியிட நிரப்புதல் குறித்த பாடவாரியான காலியிடங்களின் எண்ணிக்கை, தேர்விற்கான விண்ணப்பம், விரிவான பாடத்திட்டம், மதிப்பெண் விபரம் உள்ளிட்ட கூடுதல் விபரங்கள் அறிவிக்கையில் முழுமையாகத் தரப்பட்டுள்ளன.இந்தப் பணியிடங்களுக்கான விண்ணப்பம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க  வேண்டும். கூடுதல் விபரங்கள் மற்றும் முழுமையான அறிவிக்கையைப் பெற https://www.joinindiannavy.gov.in/ என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி – ஏப்ரல் 6, 2026.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.