வாய்ப்பு வாசல்
6 May 2026, 9:34 pm

வாய்ப்பு வாசல்

எஸ்எஸ்சி ஸ்டெனோகிராபர் 731 பணியிடங்கள்

ஒன்றிய அரசின் தேர்வு ஆணையமானStaff Selection Commission (SSC)அமைப்பில் ஸ்டெனோகிராபர் கிரேடு ‘சி’ மற்றும் கிரேடு ‘டி’ பணியிடங்களுக்கு மொத்தம்731 காலிப்பணியிடங்கள்நிரப்பப்பட உள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித் தகுதி – விண்ணப்பதாரர்கள் 12 -ஆம் வகுப்பில் (HSC) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஸ்டெனோகிராபி (ஷார்ட்ஹேண்ட்) மற்றும் தட்டச்சுபயிற்சி முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு – குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினர்களுக்கு 3 ஆண்டுகள், எஸ்சி/எஸ்டி பிரிவினர் களுக்கு 5 ஆண்டுகள் மற்றும் பிற பிரிவினர்களுக்கு அரசு விதிப்படி வயது தளர்வு வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் முறை – தகுதியானவர்கள் கணினி வழி எழுத்துத் தேர்வு (CBT), பின்னர் ஸ்கில் டெஸ்ட் (ஷார்ட்ஹேண்ட்&டைப்பிங்) மற்றும்அசல் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவர். ஸ்கில் டெஸ்ட் விவரம் – தேர்வில் ஆங்கிலம் அல்லது இந்தி மொழியில் டிக்டேஷன் வழங்கப்பட்டு, குறிப்பிட்ட நேரத்திற்குள் டைப்பிங் செய்ய வேண்டும். கிரேடு ‘சி’ மற்றும் கிரேடு ‘டி’ படி நேரம் மாறுபடும். விண்ணப்பக் கட்டணம் – பொதுப்பிரிவினருக்கு ரூ.100. எஸ்சி/எஸ்டி/பெண்களுக்கு கட்டணம் இல்லை. விண்ணப்பிக்கும் முறை – இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விபரங்கள் மற்றும் முழுமையான அறிவிக்கையைப் பெறhttps://ssc.gov.in/என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி மே15, 2026ஆகும்.

ரூபாய் நோட்டு அச்சகம் - சூப்பர் வைசர் , டெக்னீசியன் : 235 பணியிடங்கள்

ஒன்றிய அரசின் நிறுவனமான Currency Note Press, Nashik (SPMCIL) ரூபாய் நோட்டு அச்சகம் மற்றும் நாணயம் உற்பத்தி கழகத்தில் சூப்பர் வைசர், ஜுனியர் டெக்னீசியன் போன்ற பணியிடங்களுக்கு 235 காலிப் பணியிடங்கள்நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித் தகுதி – விண்ணப்பதாரர்கள் ஐடிஐ/டிப்ளமோ/இன்ஜினியரிங்/டிகிரி (Information Technology, Computer Science, Printing, Electri cal, Electronics, Fitter போன்ற துறை களில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு – குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிப்படி வயதில் தளர்வு வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் முறை –தகுதியானவர்கள் CBT (Computer Based Test), திறன் தேர்வு, சுருக்கெழுத்து மட்டும் தட்டச்சு தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பக் கட்டணம் – பொது, ஓபிசிபிரிவினருக்கு ரூ.1000. எஸ்சி/எஸ்டிபிரிவினர்களுக்கு ரூ.200 செலுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முறை – இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விபரங்கள் மற்றும் முழுமையான அறிவிக்கையைப் பெற https://cnpnashik.spmcil.com என்ற இணைய தளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி மே19, 2026 ஆகும்.

ஆர்பிஐ – அதிகாரிகள் 60 பணியிடங்கள்

இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) அதிகாரிகள் கிரேடு ‘பி’ பிரிவில்60 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பம் வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒரு துறையில் ஒளங்கலை,முதுகலை பட்டப்படிப்பில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஏப்ரல் 1, 2026 தேதியின்படி குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினர்களுக்கு 3 ஆண்டுகள், எஸ்சி/எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகள் மற்றும் பிற பிரிவினர்களுக்கு அரசு விதிப்படி வயது தளர்வு வழங்கப்படும். தகுதியானவர்கள் Phase-I ஆன்லைன் தேர்வு, Phase-II ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். பொது, ஓபிசிபிரிவினருக்கு ரூ.850 + 18% GST. எஸ்சி/எஸ்டி/PWD பிரிவினர்களுக்கு ரூ.100 + 18% GST செதுத்திவிண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்கள் மற்றும் முழுமையான அறிவிக்கையைப் பெற https://www.rbi.org.in/என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி மே 20, 2026 ஆகும்.