வாய்ப்பு வாசல்
20 May 2026, 10:26 pm

எஸ்எஸ்பி– கான்ஸ்டபிள் ஜிடி 403 பணியிடங்கள்

ஒன்றிய அரசின் Sashastra Seema Bal (SSB) அமைப்பில் Constable GD (Sports Quota) பிரிவில் மொத்தம் 403 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ விண்ணப்பம் வெளியாகியுள்ளது. கல்வித் தகுதி – விண்ணப்பதாரர்கள் 10-ஆம் வகுப்பு / 12ம் வகுப்பு / ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தேசிய / மாநில / பல்கலைக்கழக அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும். வயது வரம்பு – குறைந்த பட்சம் 18 வயது முதல் 23 வயதிற்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினர்களுக்கு 3 ஆண்டுகள், எஸ்சி / எஸ்டி பிரிவின ர்களுக்கு 5 ஆண்டுகள் மற்றும் பிற பிரிவினர்களுக்கு அரசு விதிப்படி வயது தளர்வு வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் முறை – விண்ணப்பதாரர்கள் விளையாட்டு சாதனை, ஆவண சரிபார்ப்பு, உடற்திறன் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை மூலம் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பக் கட்டணம் – பொதுப்பிரிவு மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்சி / எஸ்டி / பெண்கள் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை. விண்ணப்பிக்கும் முறை – இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்தப் பணியிட நிரப்புதல் குறித்த கூடுதல் விபரங்கள் மற்றும் முழுமையான அறிவிப்பை பெற https://recruitment.ssb.gov.in/ என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி ஜூன் 7, 2026 ஆகும்.

கோல் இந்தியாவில் 276 பணியிடங்கள்

ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான Coal India Limited (CIL) அமைப்பில் Management Trainee (Mining) பணியிடங்களுக்கு மொத்தம் 276 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித் தகுதி – விண்ணப்ப தாரர்கள் Mining Engineering துறையில் B.E / B.Tech பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களு டன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் GATE–2025 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு – ஏப்ரல் 30, 2026 தேதியின்படி விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினர்களுக்கு 3 ஆண்டுகள், எஸ்சி / எஸ்டி பிரிவினர் களுக்கு 5 ஆண்டுகள் மற்றும் பிற பிரிவினர்களுக்கு அரசு விதிப்படி வயது தளர்வு வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் முறை – GATE–2025 தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் Shortlist செய்யப்பட்டு, ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை மூலம் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பக் கட்டணம் – பொதுப்பிரிவு, ஓபிசி பிரிவினர்களுக்கு ரூ.1000 கட்டணம் செலுத்தி ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். எஸ்சி / எஸ்டி பிரிவினர்களுக்கு கட்டணம் இல்லை. விண்ணப்பிக்கும் முறை – இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்தப் பணியிட நிரப்புதல் குறித்த கூடுதல் விபரங்கள் மற்றும் முழுமையான அறி விப்பை பெற https:// www.coalindia.in/ என்ற இணையதளத்தைப் பார்வையி டலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி ஜூன் 07, 2026 ஆகும்.

இந்திய விமானப்படையில் 47 பணியிடங்கள்

இந்திய விமானப்படையில் (Indian Air Force) Group ‘C’ பிரிவில் Lower Division Clerk உள்ளிட்ட 47 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பம் வெளியாகியுள்ளது. 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு திறன் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் ஆவண சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவர். காலிப்பணியிடங்கள் இருக்கும் விமானப்படை மையங்கள் உள்ளிட்ட கூடுதல் விபரங்கள் அடங்கிய முழுமையான அறிவிப்பை பெற https://indianairforce.nic.in/ என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி மே 31, 2026 ஆகும்.