நூல் தட்டுப்பாட்டை கண்டித்து திருவில்லிபுத்தூரில் நெசவாளர்கள் கஞ்சித் தொட்டி திறப்புப் போராட்டம் அதிகாரிகள் பேச்சுவார்த்தையை அடுத்து தற்காலிக ஒத்திவைப்பு!
9 Jul 2026, 9:40 pm
<p><strong>நூல் தட்டுப்பாட்டை கண்டித்து திருவில்லிபுத்தூரில் நெசவாளர்கள் கஞ்சித் தொட்டி திறப்புப் போராட்டம் அதிகாரிகள் பேச்சுவார்த்தையை அடுத்து தற்காலிக ஒத்திவைப்பு!</strong></p><p>திருவில்லிபுத்தூர், ஜூலை 9 - திருவில்லிபுத்தூர் நகர்ப் பகுதியில் 7-க்கும் மேற்பட்ட நெச வாளர் கூட்டுறவுச் சங் கங்கள் செயல்பட்டு வருகின்றன. இச்சங்கங்கள் மூலம் நெசவாளர் களுக்குச் சேலை மற்றும் காடா துணி நெய்வதற்குக் கடந்த இரண்டு மாதங்களாக ஊடை நூல் வழங்கப்படவில்லை. மேலும், ஏற்கெனவே நெய்த சேலைகளும் கொள்முதல் செய்யப்படாமல் வீடுகளில் தேங்கிக் கிடக்கின்றன. இந்நிலையில், அரசு புதிதாக அறி முகப்படுத்தியுள்ள புதிய ரக நூல் தங்க ளுக்கு வேண்டாம் என்றும், பழையபடி தொடர்ந்து தரமான நூல்களை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, கடந்த வெள்ளிக்கிழமை சிஐடியு கைத்தறி நெச வாளர் சங்கம் சார்பில் ஆண்டாள் கூட்டு றவுச் சொசைட்டி முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தொடர்ந்து, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெக தீஸ்வரியிடமும் மனு அளிக்கப்பட்டது. மனு அளித்து ஒரு வாரமாகியும் எவ்வித நடவடிக்கையும் இல்லாததால், வியாழக்கிழமையன்று காலை மாயாண்டி பட்டி வடக்குத் தெருவில் நெசவாளர்கள் தன்னெழுச்சியாக ஒன்றுகூடி, கஞ்சித் தொட்டி திறக்கும் போராட்டத்தைத் தொடங்கினர். இப்போராட்டத்திற்கு சிஐடியு உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர். காவல்துறையினர் கலைந்துபோகச் சொல்லியும் நெசவாளர்கள் மசியவில்லை. கைத்தறி உதவி இயக்குனர் மற்றும் மாவட்ட ஆட்சியர் நேரடியாக வந்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். இதனைத் தொடர்ந்து, கைத்தறித்துறை உதவி இயக்குனர் வெங்கடேசலு சம்பவ இடத்திற்கு வந்து, அருகில் உள்ள கோவிந்தன் நெசவாளர் சொசைட்டி அலு வலகத்தில் வைத்து நெசவாளர்கள் மற்றும் சிஐடியு நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, “நெச வாளர்களின் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்குக்கொண்டு சென்று, ஒரு வார காலத்திற்குள் உரிய முடிவு எடுக்கப் படும்” என்று அவர் உறுதியளித்தார். இதையேற்று நெசவாளர்கள் தங்களது கஞ்சித் தொட்டி போராட்டத்தைத் தற்காலிகமாக ஒத்திவைத்தனர். இப்பேச்சுவார்த்தையில் கைத்தறித் துறை அலுவலர் சாமிநாதன், திரு வில்லிபுத்தூர் டிஎஸ்பி பாலசுந்தரம், வட்ட வருவாய் ஆய்வாளர் தங்க மாரிமுத்து, சிஐடியு மாவட்டத் தலைவர் மகாலட்சுமி, சிபிஎம் நகரச் செயலாளர் ஜெயக்குமார், நகர்மன்ற உறுப்பினர் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். </p>
