சிபிஎம்-தீண்டாமை ஒழிப்பு முன்னணி தொடர் முயற்சி வெற்றி! சாதிய அடையாளத்துடன் இருந்த கிராமப் பெயர் மாற்றம்
30 Sept 2026, 10:25 pm

சிபிஎம்-தீண்டாமை ஒழிப்பு முன்னணி தொடர் முயற்சி வெற்றி! சாதிய அடையாளத்துடன் இருந்த கிராமப் பெயர் மாற்றம்

திருவில்லிபுத்தூர், செப். 30 -திருவில்லிபுத்தூர் அருகேஅச்சம் தவிர்த்தான் கிராமத்தை ஒட்டிய பகுதியில், சாதிய அடையாளத்துடன் நீண்டகாலமாக அரசு ஆவணங்களிலும், அரசு நிர்வாகத்திலும் பயன்படுத்தப்பட்டு வந்த ‘பறைசேரி’ என்ற பெயர் தற்போது மாற்றப்பட்டுள்ளது. அந்தப் பகுதிக்கு, ‘வடக்கு அச்சம்தவிர்த்தான்’ என பெயர் மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.சாதிய அடையாளத்துடன் உள்ள தங்களின் ஊர்ப்பெயரை மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தனர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இந்தக் கோரிக்கையைத் தீவிரமாக முன்வைத்தது. தேர்தல் பிரச்சாரத்துக் காக வந்த கட்சியின் மாநிலச்செயலாளர் பெ. சண்முகம்,பொதுமக்களை நேரில் சந்தித்து, பெயர் மாற்றத்துக் காக கட்சி தொடர்ந்து குரல்கொடுக்கும் என தெரிவித் திருந்தார். ஊர், தெருக்களுக் கான சாதிப் பெயரை நீக்கும் அரசாணை திமுக ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்டநிலையில், நீதிமன்றம் அதற்குத் தடை விதித்தது. இந்த தடை விலக்கப்பட வேண்டும் என்றும் சிபிஎம் வலியுறுத்திவந்தது.

புதிய ஆட்சி அமைந்த பிறகு, தவெக அரசின் கவனத்துக்கும் இந்தக் கோரிக்கை கொண்டு செல்லப்பட்டது. சட்டப்பேரவை உறுப்பினர் டி. லதா சட்டப்பேரவையில் இக்கோரிக்கையை வலியுறுத்தினார்.பெயர் மாற்றத்திற்காக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில்,செப்டம்பர் 30 அன்று தோழர் பி. சீனிவாசராவின் நினைவு நாளை முன்னிட்டு, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தை முற்றுகையிடும்போராட்டமும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, புதன் கிழமை (செப்.30) அன்று, போராட்டத்துக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அரசுசார்பில் பெயர் மாற்றத்துக்கான உத்தரவு வெளியிடப்பட்டது. அரசின் உத்தரவு நகல் வட்டாட்சியர் மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் சசிகுமாரிடம் வழங்கப்பட்டது.

இதையடுத்து முற்றுகைப் போராட்டம் ஒத்திவைக்கப் பட்டு, புதிய பெயரான ‘வடக்கு அச்சம் தவிர்த்தான்’ கிரா

மத்தில் பொதுமக்களைச் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஊர் நாட்டாமைகள் கணேசன், ராஜபாண்டி ஆகியோர் தலைமை வகித்தனர். ஒன்றியச்

செயலாளர் சசிகுமார் முன்னிலை வகித்தார். கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான கே.பாலபாரதி, பெயர் மாற்றத்துக் கான அரசு உத்தரவு நகலை ஊர் நாட்டாமைகள் மற்றும்பொதுமக்களிடம் வழங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே. அர்ஜுனன், மாவட்டச் செயலாளர் அ. குருசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாரியப்பன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஜோதிலட்சுமி, திருமலை, திருவில்லிபுத்தூர் நகரச் செயலாளர் ஜெயக்குமார், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சந்தனம், இருளப்பன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் லட்சுமி, மாவட்டச் செயலாளர் முருகன்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

‘மக்கள் ஒற்றுமையே காரணம்’

நிகழ்ச்சியில் கே. பாலபாரதி பேசுகையில், “சாதியின் பெயரால் ஒரு கிராமம் அழைக்கப்படுவது நீண்டகாலமாக தொடர்ந்திருப்பது கவலைக்குரியது. சாதிய அடையாளத்துடன் உள்ள சேரிகள், காலனிகள் உள்ளிட்ட பெயர்களை மாற்றி, சமத்துவம் மற்றும் சமூக நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் பெயர்களை மாற்ற வேண்டும் என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கை ஆகும். தொடர்ந்து நடத்தப்பட்ட போராட்டங்கள், மக்களின் ஒற்றுமை மற்றும் அரசின் நடவடிக்கை ஆகியவற்றின் விளைவாக தற்போது பெயர் மாற்றத்துக்கான உத்தரவு கிடைத்துள்ளது. இது பொதுமக்களின் ஒற்றுமைக்குக் கிடைத்த வெற்றி!” என்றார்.

மாணவி வனஜாவுக்கு பாராட்டு

சாதிய அடையாளத்துடன் ஊர்ப் பெயர் இருப்பதை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை துணிச்சலுடன் வெளிப்படுத்தி சமூக வலைதளங்களிலும் பேட்டியளித்த மாணவி வனஜாவை கட்சித் தலைவர்கள் பாராட்டினர்.