தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உழவர் சந்தை பாலப் பணி தாமதம் 108 ஆம்புலன்ஸ்கள் ஒரு கிலோமீட்டர் சுற்றிச் செல்லும் அவலம்

31 May 2026, 10:01 pm
உழவர் சந்தை பாலப் பணி தாமதம் 108 ஆம்புலன்ஸ்கள் ஒரு கிலோமீட்டர் சுற்றிச் செல்லும் அவலம்

உழவர் சந்தை பாலப் பணி தாமதம் 108 ஆம்புலன்ஸ்கள் ஒரு கிலோமீட்டர் சுற்றிச் செல்லும் அவலம்

விரைந்து பணிகளை முடிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை திருவில்லிபுத்தூர், மே 30- திருவில்லிபுத்தூர் நகரின் மையப்பகுதி யில் உள்ள உழவர் சந்தை அருகே நடை பெற்று வரும் பாலப் பணி ஒன்றரை ஆண்டு களாக நிறைவடையாததால், அரசு மருத்து வமனையில் இருந்து அவசர சிகிச்சைக்காக செல்லும் 108 ஆம்புலன்ஸ்கள் ஒரு கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் மற் றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி யுள்ளனர்.

திருவில்லிபுத்தூர் பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை, உழவர் சந்தை மற்றும் மீன் மார்க்கெட் ஆகியவை செங் கோட்டை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ளன.

அரசு மருத்துவமனையிலிருந்து மதுரை மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் 108 ஆம்புலன்ஸ்கள், உழவர் சந்தை வழியாக நேரடியாக தேசிய நெடுஞ்சாலையை அடைந்து வந்தன.

இந்நிலையில், கழிவுநீர் செல்லும் வசதியை மேம்படுத்தும் நோக்கில், தேசிய நெடுஞ்சாலையையும் உழவர் சந்தை பகு தியையும் இணைக்கும் இடத்தில் பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. பணி கள் தொடங்கி ஒன்றரை ஆண்டுகள் கடந்தும் இன்னும் நிறைவடையவில்லை.

பாலப் பணி தொடங்குவதற்கு முன்பு கழிவுநீர் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றதாகவும், அடிக்கடி ஏற்பட்ட அடைப்புகளைத் தவிர்க்க பாலத்தின் கீழ் கழிவுநீர் செல்லும் வகையில் திட்டமிடப் பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், அருகிலுள்ள சந்தைப் பேட்டை பகுதி மக்கள் தங்கள் தெரு வழி யாக கழிவுநீர் செல்லக்கூடாது என்றும், பழைய நடைமுறையின்படி தேசிய நெடுஞ்சாலையின் அடிப்பகுதியிலேயே கழிவுநீர் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற னர்.

இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியபோதும் தீர்வு எட்டப்படவில்லை.

இதன் காரணமாக பாலப் பணி பாதியிலேயே நிறுத்தப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது 100 மீட்டர் தொலைவில் தேசிய நெடுஞ்சாலையை அடையக்கூடிய 108 ஆம்புலன்ஸ்கள், மாற்றுப் பாதை வழி யாக சுமார் ஒரு கிலோமீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

இது அவசர மருத்துவ சேவைகளில் தாமதத்தை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆட்சிக் காலத்தில் தொடங்கப் பட்ட இந்தப் பணியை விரைவாக நிறைவு செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பி னரும் வலியுறுத்தி வருகின்றனர்.

தற்போ தைய சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக், இருமுறை சம்பவ இடத்தை நேரில் பார்வை யிட்டு, சந்தைப்பேட்டை பகுதி மக்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்தியபோதும் பிரச்சனைக்கு தீர்வு காணப்படவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறு கையில், “மக்கள் கோரிக்கைப்படி தேசிய நெடுஞ்சாலை வழியாக கழிவுநீரை கொண்டு செல்ல வேண்டுமெனில், தேசிய நெடுஞ்சாலைத் துறையிடம் சாலையை தோண்டுவதற்கான அனுமதி பெற வேண் டும். அந்த அனுமதியை விரைவாகப் பெறு வது சாத்தியமில்லை.

மேலும், தற்போ தைய திட்டத்தில் கழிவுநீர் தெருக்களுக்குள் செல்லாது. தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள வடிகால் வழியாகச் சென்று மீண்டும் பெரிய வடிகாலில் கலக்கும் வகை யில்தான் திட்டமிடப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது” என்ற னர்.

எனினும், தங்கள் பகுதி வழியாக கழிவுநீர் செல்ல அனுமதிக்க முடியாது என்ற நிலைப்பாட்டில் அப்பகுதி மக்கள் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது.

மக்களின் எதிர்ப்பும், நிர்வாக தாமதமும் காரணமாக முக்கியமான இந்தப் பணி முடங்கியுள்ள நிலையில், மாவட்ட நிர்வா கம் மற்றும் நகராட்சி நிர்வாகத்தின் மண்டல இயக்குநர் நேரடியாக தலையிட்டு போர்க்கால அடிப்படையில் பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.