முந்தய பக்கம்

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மரக்கன்று நடும் விழா

21 Jun 2026, 12:49 am
தூய்மை இந்தியா திட்டத்தின்  கீழ் மரக்கன்று நடும் விழா

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மரக்கன்று நடும் விழா

திருவில்லிபுத்தூர், ஜூன் 20- திருவில்லிபுத்தூர் நகராட்சி சுகாதாரப் பிரிவின் சார்பில், தூய்மைக்கான இந்தியா திட்டத்தின் கீழ் சுற்றுச் சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. செண்பகத்தோப்பு செல்லும் வழியில் அமைந்துள்ள இயற்கை உரம் தயாரிப்பு மைய வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மருத்து வர் சுகபுத்திரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு விழாவை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் திருவில்லிபுத்தூர் நகராட்சி ஆணையா ளர் குமார், உதவி பொறியாளர் திவாகர், சுகாதார அலு வலர் கந்தசாமி, நகர அமைப்பு ஆய்வாளர் சுந்தர வள்ளி, சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார மேற்பார்வை யாளர்கள் மற்றும் தூய்மை இந்தியா திட்ட பணியா ளர்கள் கலந்து கொண்டனர். மேலும், இந்து மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட (என்.எஸ்.எஸ்.) ஒருங்கிணைப்பாளர் மற்றும் மாண வர்கள் ஆர்வமுடன் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியின் மூலம் பசுமை வளத்தை அதிக ரிப்பதோடு, சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.​​​​​​​

Share
FacebookXWhatsAppTelegram