திருவில்லிபுத்தூரில் பள்ளி முன் நடப்பட்ட மரக்கன்றுகள் குப்பை கொட்டுதலை தடுக்க கண்காணிப்பு கேமரா
3 Jun 2026, 9:59 pm

திருவில்லிபுத்தூரில் பள்ளி முன் நடப்பட்ட மரக்கன்றுகள் குப்பை கொட்டுதலை தடுக்க கண்காணிப்பு கேமரா

திருவில்லிபுத்தூர், ஜூன் 3- திருவில்லிபுத்தூர் நண் பர்கள் ரோட்டரி சங்கம் மற் றும் நகராட்சி சுகாதாரத் துறை இணைந்து, நகரில் உள்ள திரு இருதய மேல் நிலைப் பள்ளி முன்புறத்தில் பென்ஸ் வேலி அமைத்து மரக்கன்றுகள் நடும் பணி யை புதன்கிழமை மேற் கொண்டது. பள்ளி முன்புறப் பகுதி யில் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டு சுகாதாரக் கேடு நிலவி வந்ததைத் தொடர்ந்து, அப்பகுதியை சுத்தமாக பராமரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சிக்கு நண்பர்கள் ரோட்டரி சங்கத் தலைவர் கந்தசாமி தலைமை தாங்கி னார். திருவில்லிபுத்தூர் நக ராட்சி ஆணையாளர் குமார் கலந்து கொண்டு மரக்கன்று களை நட்டு வைத்து நிகழ்ச்சி யை தொடங்கி வைத்தார். மொத்தம் 25 மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சியில் நகர் காவல் உதவி ஆய்வாளர் தர்மராஜ், ரோட்டரி உதவி ஆளுநர் முருகதாசன், சுகாதார ஆய் வாளர்கள் சங்கரன், முனி செல்வம், சுகாதார மேற்பார் வையாளர்கள், தூய்மை இந் தியா திட்டப் பணியாளர்கள், கிரனோவில் ஒருங்கிணை ப்பாளர் சந்திரன் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பள்ளி முன்புறத்தில் பென்ஸ் வேலி அமைத்து மரக்கன்றுகள் நடப்பட்டது டன், அப்பகுதியில் தொட ர்ந்து குப்பைகள் கொட்டப் படுவதைத் தடுக்கும் வகை யில் கண்காணிப்பு கேமராக் களும் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், பள்ளி வளா கத்தைச் சுற்றியுள்ள பகுதி யை தூய்மையாக பராம ரிப்பதற்கும், பள்ளி மாணவி களின் சுகாதாரத்தைப் பாது காப்பதற்கும், அருகிலுள்ள தெருக்களில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது வீட்டு குப்பைகளை வீடு தேடி வரும் துப்புரவுப் பணியா ளர்களிடம் ஒப்படைக்கு மாறு நகராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.