ஆர்.சி. பள்ளியில் சுதந்திர தின விழா
16 Aug 2026, 9:48 pm

ஆர்.சி. பள்ளியில் சுதந்திர தின விழா

ஸ்ரீவில்லிபுத்தூர், ஆக.16–ஸ்ரீவில்லிபுத்தூர் செயின்ட் ஜோசப் ஆர்.சி. பள்ளிகள் சார்பில் 80-வது சுதந்திர தினத்தையொட்டி மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளர் இரா.முரளி ஆனந்த் தலைமை வகித்தார். மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) பொறுப்பு மஞ்சுளாதேவி, ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி ஆணையர் வை.குமார், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் உதவிஆய்வாளர், உதவி பங்குத்தந்தை மதியழகன், பிரதீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவையொட்டி முப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் சுதந்திரப் போராட்டத் தலைவர்களின் வேடமணிந்து பள்ளி வளாகத்தில் இருந்து வடக்கு ரதவீதி, மேல ரதவீதி, தெற்கு ரதவீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். பின்னர் பாரத ஸ்டேட் வங்கி முன்பு பொதுமக்களுக்கு 500 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் இ.பரலோகம், தொடக்கப்பள்ளித்தலைமை ஆசிரியை மங்கள ரோஸ்மேரி, நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி முதல்வர் பிரவீனா மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.