தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பிளாஸ்டிக் கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு எதிர்ப்பு திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

25 May 2026, 10:19 pm
பிளாஸ்டிக் கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு எதிர்ப்பு திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
<p><strong>பிளாஸ்டிக் கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு எதிர்ப்பு திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை</strong></p><p>​​​​​​​திருவில்லிபுத்தூர், மே 25- திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலு வலக வளாகத்தில் பிளாஸ்டிக் கழிவு சுத்தி கரிப்பு ஆலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றி யத்திற்கு உட்பட்ட 29 ஊராட்சிகளில் சேக ரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை மறு சுழற்சி செய்யும் நோக்கில் நாச்சியார்பட்டி யில் சுத்திகரிப்பு ஆலை செயல்பட்டு வந்தது. அங்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த தைத் தொடர்ந்து, பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வந்த மடவார் வளா கம், அத்திகுளம், தேவேந்திரி மற்றும் நகராட்சி 33-வது வார்டு பகுதிகளை ஒட்டிய இடத்தில் புதிய சுத்திகரிப்பு ஆலை அமைக்க ஒன்றிய நிர்வாகம் திட்டமிட்டதாக கூறப்படு கிறது. அதேபோல், நகராட்சி சார்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் திட்டமும் கடந்த ஆட்சிக் காலத்தில் முன்னெடுக்கப் பட்ட நிலையில், பொதுமக்கள் எதிர்ப்பால் அது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் அந்த பணிகளை தொடங்க நகராட்சி நிர்வாகம் முயற்சி மேற்கொண்டதாக தகவல் வெளியாகியது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் வழக்க றிஞர் பிரபாகரன் தலைமையில் ஒன்றுகூடி, திங்கட்கிழமை காலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் லலிதா தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் ஊர் நிர்வாகிகள், “பிளாஸ்டிக் கழிவு சுத்திக ரிப்பு ஆலை அமைக்கப்பட்டால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும். மேலும் பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது” எனக் கூறி, அந்த இடத்தில் ஆலை அமைக்கக் கூடாது என வலியுறுத்தினர். இதையடுத்து, வட்டார வளர்ச்சி அலு வலர் லலிதா, “பொதுமக்களின் எதிர்ப்பை கருத்தில் கொண்டு, பழைய ஒன்றிய அலு வலக வளாகத்தில் சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் பணி முழுமையாக நிறுத்தி வைக்கப்படுகிறது” என தெரிவித்ததுடன், அதற்கான எழுத்துப்பூர்வ உறுதியையும் வழங்கினார். இதனைத் தொடர்ந்து போராட்டம் தற்கா லிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும், வழங்கப்பட்ட உறுதியை மீறி பணிகள் மேற்கொள்ளப்பட்டால் மீண்டும் தீவிர போராட்டம் நடத்தப்படும் என பகுதி மக்கள் எச்சரித்தனர். இந்நிலையில், நகராட்சி உதவி பொறி யாளர் திவாகர் கூறுகையில், “33-வது வார்டு பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டிருந்தது உண்மைதான். ஆனால், பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக பணிகள் தற்காலிக மாக நிறுத்தப்பட்டன. கடந்த வாரம் சுற்றுச் சூழல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற் கொண்டபோது, அருகில் அதிக வீடுகள் உள்ளதால் அந்த இடத்தில் ஆலை அமைக்க முடியாது என தெரிவித்தனர். இதனால் வேறு இடம் தேர்வு செய்யும் நிலை ஏற்பட்டுள் ளது” என்றார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.