ஸ்ரீவில்லிபுத்தூர் பென்னிங்டன் நூலக 150 ஆவது ஆண்டு விழா துவக்கம்
26 Dec 2025, 4:32 pm
<p><strong>ஸ்ரீவில்லிபுத்தூர் பென்னிங்டன் நூலக 150 ஆவது ஆண்டு விழா துவக்கம்</strong></p>
<p>திருவில்லிபுத்தூர், டிச.26- தென் தமிழகத்தின் திறந்த பல்கலைக் கழகம் என்று போற்றப்படும், ஸ்ரீவில்லி புத்தூர் பென்னிங்டன் நூலகத்தின் 15௦-வது ஆண்டு விழாக்கொண்டாட்டங்கள் வெள்ளிக்கிழமையன்று துவங்கியது. மூன்று நாட்களுக்கு நடைபெற உள்ள இந்நிகழ்வின், முதல் நாள் விழாவில், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவ ருமான வி. ராமசுப்ரமணியன், மேனாள் காவல்துறை தலைமை இயக்குனரும், தமிழ்நாடு ஐந்தாவது காவல் ஆணை யத்தின் உறுப்பினருமான டாக்டர் கி. ராதா கிருஷ்ணன், சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர், வி. ராதாகிருஷ்ணன், மூத்த வழக்கறிஞர் கடற்கரை ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். நூல்களை டிஜிட்டல்மயமாக்கிடுக சென்னையில் உள்ள கன்னிமரா நூலகத்திற்கு முன்பாகவே 1875 ஆம் ஆண்டிலேயே இந்தப் பென்னிங்டன் நூலகம் துவக்கப்பட்டு விட்டதாக நீதிபதி வி. ராமசுப்ரமணியன் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். இந்நூலகத்தில் உள்ள பழைய நூல்களைப் பார்வையிட்ட அவர், இந்நூலகம் சிறப்பாகச் செயல்படுவ தாகவும், இது அறிவுப்பெட்டகமென்றும் இங்கு உள்ள நூல்கள் அனைத்தையும் டிஜிட்டல் முறையில் பதிவு செய்து எதிர் கால சந்ததியினர் வாசிக்கும் வண்ணம், அவற்றைப் பாதுகாக்க வேண்டியது அவசி யமென்றும் என்றும் தெரிவித்தார். கண்காட்சி முன்னதாக, திருவில்லிபுத்தூரின் சிறப்பு அம்சங்களை விளக்கும் கண்காட்சி யை வி. ராமசுப்ரமணியன் திறந்து வைத் தார். 15௦-வது ஆண்டு விழாக்கொண்டாட் டங்களுக்கான ஞாபகார்த்த கல்வெட்டு திறக்கப்பட்டது. இந்தியத் தபால் துறை வெளியிட்ட இந்நூலகத்தின் நினைவு தபால் தலையும், ஆண்டு விழா மலரும் நீதி பதியால் வெளியிடப்பட்டன. முனைவர் ஜெயகுமரன் நன்றி கூறினார். ராஜாராம், மற்றும் டாக்டர் திவ்யா ஆகியோர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர். டிசம்பர் 27 சனிக்கிழமையன்று காலை யில், பத்மஸ்ரீ சாலமன் பாப்பையா, ராஜா, கவிதா ஜவஹர், அரசு குற்றவியல் வழக்கறி ஞர் ஜான்சி சுர்ஜித் கலந்து கொள்ளும் சிறப்பு பட்டிமன்றம் நடைபெறுகிறது.</p>
