நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
20 Jun 2026, 11:12 pm

நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

திருவில்லிபுத்தூர், ஜூன் 20- திருவில்லிபுத்தூரில் மட வார் வளாகம் அருகே தமிழ் நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் நெல் கொள் முதல் நிலையம் சனிக் கிழமை திறக்கப்பட்டு, விவ சாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யும் பணி தொடங்கப்பட்டது. பெரியகுளம் பாசனக் கண்மாய் மற்றும் சுற்றுவட் டார கண்மாய்களை சார்ந்த விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொள் முதல் செய்யும் நோக்கில் இந்த மையம் தொடங்கப்பட் டுள்ளது. நெல் கொள்முதல் நிலைய அலுவலராக ஜோன்ஸ் பாக்கியம் மற்றும் உதவி யாளராக வெள்ளத்துரை நியமிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் 40 கிலோ எடையுள்ள ஒரு நெல் மூட்டைக்கு ரூ.1,000 வழங்கப்படும் என தெரி விக்கப்பட்டுள்ளது. நெல் விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள் 10(1) அடங்கல் சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டையுடன் கொள்முதல் மைய அலுவ லகத்தை அணுக வேண்டும். அலுவலர்கள் ஆவணங் களை பதிவு செய்து சம்பந் தப்பட்ட கிராம நிர்வாக அலு வலருக்கு அனுப்புவார்கள். அவரின் ஒப்புதல் கிடைத்த பின்னர் விவசாயிகளிடமி ருந்து நெல் கொள்முதல் செய்யப்படும். அறுவடை செய்யப்பட்ட நெல் வரத்து இருக்கும் வரை இந்த கொள்முதல் நிலையம் செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். விவசாயிகள் தங்களது விளைபொருளை நியாய மான விலையில் விற்பனை செய்யவும், இடைத்தர கர்கள் மற்றும் வியாபாரி களின் சுரண்டலிலிருந்து பாதுகாக்கவும் அரசு சார்பில் இந்த நெல் கொள்முதல் மையம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், விவசாயி களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதே இதன் முக் கிய நோக்கமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மம்சாபுரத்தில் மாற்று இடம் தேர்வு செய்யப்படுமா?

திருவில்லிபுத்தூர், ஜூன் 20- விருதுநகர் மாவட்டத்தில் விவசாயி களிடமிருந்து அறுவடை செய்யப்பட்ட நெல்லை உரிய காலத்தில் கொள்முதல் செய்வதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் பல்வேறு பகுதி களில் நேரடி நெல் கொள்முதல் நிலை யங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் மம்சாபுரம் பகு தியில் நெல் கொள்முதல் மையம் அமை க்க மாவட்ட நிர்வாகம் உத்தரவு வழங்கி யுள்ளது. ஆனால், கடந்த ஆண்டு வரை செயல்பட்டு வந்த கொள்முதல் மையம் அமைந்திருந்த இடத்தில் தற்போது சிக் கல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒரு குறிப்பிட்ட சமூகத் திற்குச் சொந்தமான இடத்தில் நெல் கொள்முதல் மையம் செயல்பட்டு வந்தது. அந்த இடத்திற்கான மின் இணை ப்புச் செலவை மட்டும் கொள்முதல் மைய நிர்வாகம் வழங்கி வந்ததாக கூறப்படு கிறது. இந்நிலையில், அந்த இடத்தைச் சுற்றியுள்ள பட்டா நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை வேலியிட்டு அடைத்துள்ளதால், கொள்முதல் மையம் அமைந்துள்ள பகுதிக்கு செல்லும் பாதை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்ட நிர்வாகம் உத்த ரவு வழங்கியிருந்தாலும், போக்கு வரத்து வசதி மற்றும் உரிய மின் இணைப்பு டன் கூடிய இடம் இல்லாத காரணத்தால் நெல் கொள்முதல் மையத்தை செயல் படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனவே, மம்சாபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயி களிடமிருந்து நெல்லை சிரமமின்றி கொள் முதல் செய்யும் வகையில், மாவட்ட நிர்வா கம் உடனடியாக தலையிட்டு மாற்று இடத்தைத் தேர்வு செய்து, அனைத்து அடிப்படை வசதிகளுடனும் நெல் கொள்முதல் மையத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவ சாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். அறுவடை செய்யப்பட்ட நெல் கை யிருப்பில் உள்ள நிலையில், கொள் முதல் பணிகள் தாமதமானால் விவசாயி கள் பொருளாதார இழப்பை சந்திக்கும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.